கடந்த 2008ஆம் வெளிவந்த Twilight என்ற மர்ம படத்தின் நாயகன். Robert Pattinson மற்றும் நாயகி Kristen Stewart ஆகிய இருவருக்கும் பயங்கர லவ்வாம். இருவரும் தனிமையில் பல இடங்களில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வருகிறார்கள். இந்நிலையில் பத்திரிகை போட்டோகிராபர்களிடம் இருந்து தப்பிக்க தோழியின் வீட்டை அடிக்கடி உபயோகிக்க ஆரம்பத்துள்ளார் நடிகை Kristen Stewart.
இதைக்கண்டிபிடித்த ஒரு புலனாய்வு பத்திர்கை உண்மையை நடிகையின் வாயிலேயே வரவழைக்க வேண்டும் என்பதற்காக Kristen Stewart என்ற நடிகைக்கும் அவரது தோழிக்கும் லெஸ்பியன் உறவு என்று கிளப்பிவிட பதறியடித்து பேட்டிக்கொடுத்த Kristen Stewart, தன்னுடைய தோழியின் வீட்டை தனது காதலருடன் சந்திப்பதற்காகத்தான் பயன்படுத்திக்கொண்டதாகவும், தோழியின் மீது அபாண்டமாக பழிபோட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
தற்போது காதலர்கள் சந்திப்பது 1000 மைல்களுக்கு அப்பால் ஒரு தனிமைத்தீவில்தானாம். சின்னஞ்சிறு காதலர்களை 1000 மைல்களுக்கு அப்பால் துரத்திவிடுவதுதான் பத்திரிகை தர்மமா?
இருவருக்குமே தற்போது ஹாலிவுட்டில் படங்கள் குவிந்து வருகிறது. இவர்கள் நடித்த Twilight என்ற மர்ம படம் வெறும் $37 மில்லியன் பட்ஜெட்டில் தயாரானது. ஆனால் உலகம் முழுவதும் $392 வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்நிலையில் Twilight 2 படத்தில் மீண்டும் இருவரும் நடிக்க உள்ளனர்.
0 comments:
Post a Comment