தமிழகத்தில் எனக்கு கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு.. அதான் தமிழில் இப்போதைக்கு நடிக்க முடியாத சூழல் உள்ளது, என்று நடிகை அஞ்சலி கூறினார். தமிழில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் படம் ஆந்திராவிலும் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. ஹைதராபாதில் நடந்த இதன் வெற்றி விழாவில் பங்கேற்ற அஞ்சலி தமிழ் படங்களில் தான் நடிக்க முடியாத சூழல் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
விழாவில் அவர் பேசுகையில், "ஆதலால் காதல் செய்வீர்' படம் தயாரான போது அதில் கதாநாயகியாக நடிக்க என்னைத்தான் அழைத்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் எனக்கு சில பிரச்சினைகள் உள்ளன. அது எல்லோருக்கும் தெரியும். எனவேதான் தமிழ் படங்களில் நடிக்காமல் உள்ளேன். ‘ஆதலால் காதல் செய்வீர்' படத்திலும் இதனால்தான் நடிக்க முடியவில்லை. இந்த படம் ஆந்திராவில் ரிலீசாகி பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியை எனக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்," என்றார்.
0 comments:
Post a Comment