இலங்கை மின் உதிரிப்பாகம் மற்றும் கையடக்க தொலைபேசி ஆகிய துறைகளில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள நாட்டின் முன்னிலை மின் உதிரிப்பாக நிறுவனமான ஒரெஞ்ச் முதற்தடவையாக அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கையடக்க தொலைபேசிகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹொங்கொங்கில் அமைந்துள்ள டெலி டோக் நிறுவனத்துடன் இணைந்து ஒரெஞ்ச் நிறுவனம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன் அதற்கான வைபவம் கொழும்பு கலதாரி ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.
“ எமது நிறுவனம்் டெலி டோக் நிறுவனத்துடன் இணைந்து கையடக்க தொலைபேசிகளை மாத்திரமன்றி மின் உதிரிப்பாகங்களையும் எதிர்காலத்தில் உற்பத்தி செய்யும். கையடக்க தொலைபேசி, மின் உதிரிப்பாகம் ஆகிய இரண்டு துறைகளையும் ஒரே துறையாக மாற்றுவதே எமது நோக்கம்” என ஒரெல் கோப்பரேஷன் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குஷான் கொடிதுவக்கு தெரிவித்தார்.
கலர் போ ஒரெஞ்ச் கையடக்க தொலைபேசிகள் X40, X 200, F 3, F 2, X110 ஆகிய வடிவங்களில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் மின்சாரமுள்ள வீடுகளிலுள்ள மின் உபகரணங்களை கையடக்க தொலைபேசி ஊடாக கட்டுப்படுத்தக் கூடிய புதிய அப் (App) ஒன்றையும் தமது நிறுவனம் தயாரித்துள்ளதாக ஒரெஞ்ச் நிறுவனத்தின் கையடக்க தொலைபேசி பிரிவின் பொது முகாமையாளர் கிஹான் சிகேரா தெரிவித்துள்ளார்.
பாவனையாளர்களின் வேண்டுகோளுக்கு அமைய உற்பத்தி செய்யப்பட்டுள்ள புதிய அப் மூலம் மின்சார குமிழ்களின் வெளிச்சத்தை குறைத்தல், மின்குமிழ்களை எரிய வைத்தல், அணைத்தல், அலாரத்துக்கு அமைய மின் உபகரணங்களை எரியவிடுதல், வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்தவுடன் மின்குமிழ்கள் தானாக ஒளிர்வது உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை இதன்மூலம் மேற்கொள்ளலாம்
0 comments:
Post a Comment