ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல், முதற் தடவையாக நாட்டில் அறிமுகம் செய்யும் சேவைகள் வரிசையில்் இம்முறை மொபிடெல் Huawei உடன் கைகோர்த்துள்ளது. Huawei Ascend Y220 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய ஒப்பந்த திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மொபிடெல் வாடிக்கையாளர்கள் இதற்கென 18 மாத கால ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம் விஷேட பாவனைக்குப் பிந்திய மொபிடெல் கட்டண முறையொன்றுடன் கூடியது. மாதாந்த அடிப்படையில் பின்வரும் உள்ளம்சங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. 2GB டேடா, 100 M2M நிமிடங்கள் மற்றும் 500 M2M குறுந்தகவல்கள் போன்றன வழங்கப்படும். இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் போது, ஆரம்பக் கட்டணமாக ரூபா 10,000/- வைச் செலுத்த வேண்டும்.
ஒப்பந்த கால முடிவில் வாடிக்கையாளர் புதிய ஸ்மார்ட்போனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
Huawei Ascend Y220 ஸ்மார்ட் போன் இரட்டை SIM பாவனை கொண்டது. 3.5 அங்குல தொடுகை திரை, 0.3MP சக்தி கொண்ட பின் பக்க கெமறா மற்றும்் RAM 256MB அதி உயர் நினைவாற்றல், 512 MB ROM, நுண் SD கார்ட், (32G வரை) எனபன போன்ற பண்புகளோடு கறுப்பு நிறத்தில் கிடைக்கின்றது.
0 comments:
Post a Comment