இன்றுடன் முடியும் 2013 சிறந்த காமெடி நடிகனாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார் பரோட்டா சூரி. கடந்த ஆண்டு நகைச்சுவை உலகை கட்டுக்குள் வைத்திருந்த நடிகர் சந்தானத்தை பின்னுக்கு தள்ளி, தனது பிரத்தியேக நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவரை கவிழ்பதற்கு சதி நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
சமீபகாலமாக சில படங்களுக்கு பப்ளிசிட்டி வேண்டும் என்பதற்காக ரஜினி போன்ற சில மெகா நடிகர்களிடம் அப்படங்களைப்பற்றி கமெண்ட் வாங்கி அதை விளம்பரம் செய்கின்றனர்.
அதேபோல், விக்ரம்பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்திற்கும் ரஜினியிடம் கருத்து கேட்டனர். இதற்கு வித்தியாசமான ஆக்சன் படம் என்று கருத்து சொல்லியிருந்தார்.
அதை அப்படத்தின் விளம்பரங்களில் பயன்படுத்தியிருந்தனர். இந்த சமயத்தில், காமெடி நடிகர் சூரியின் டுவிட்டரில், சிலர் மொக்கைப் படங்களையெல்லாம் பிரபலங்களை பார்க்க வைத்து, அவர்களிடம் ஆகா ஓகோவென்று அப்படங்களை பேச வைத்து விளம்பரம் செய்கிறார்கள்.
அதனால் அதை நம்பி தியேட்டர் பக்கம் போகாதீர்கள் என்று ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்ததாம். அவர், இவன் வேற மாதிரி படத்தைப்பற்றி ரஜினி சென்னதைதான் அப்படி குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த செய்தி கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது.
ஆனால், சூரிதரப்பு இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்துள்ளது. காரணம், சூரி தன் பெயரில் டுவிட்டர் கணக்கே இதுவரை தொடங்கவில்லையாம். அதை பயன்படுத்த அவருக்கு நேரம்கூட இல்லையாம். அப்படியிருக்க வேறு யாரோதான் தன் பெயரில் இப்படி டுவிட்டர் ஆரம்பித்து செய்தி வெளியிட்டுள்ளனர் என்கிறார்கள்.
அதுவும் இப்போது நான் மார்க்கெட்டில் பிசியாக இருப்பதால் என் வளர்ச்சிக்கு ஏதாவது வகையில் சதி செய்ய வேண்டும் என்பதற்காக யாரோ விஷமிகள்தான் இப்படி அவதூறு பரப்பி என் பெயரை டேமேஜ் செய்துள்ளனர் என்று தன் நிலையை விளக்கியுள்ளார் சூரி.
0 comments:
Post a Comment