தென் ஆப்ரிக்காவின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான ஜாக்ஸ் காலிஸ், இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
1995ம் ஆண்டு தனது 20வது வயதில் கிரிக்கெட்டில் அறிமுகமான காலிஸ் இதுவரை 165 டெஸ்ட் போட்டியில் விளையாடி 13,174 ரன்களை குவித்துள்ளார். இதில், 44 சதம், 58 அரைசதம் அடித்துள்ளார். நேற்று இவர் அளித்த பேட்டியில், ‘ஓய்வு பெறுவது கடினமான முடிவு. ஆனால், ஓய்வு பெற இதுதான் சரியான தருணம் என கருதுகிறேன். இத்துடன் கிரிக்கெட்டிலிருந்து நான் விலகிவிடப் போவதில்லை. 2015ம் ஆண்டு உலக கோப்பையை தென் ஆப்ரிக்காவுக்கு பெற்றுத்தர வேண்டுமென்பதே என் லட்சியம். அதற்கான வாய்ப்பு இருந்தால் நிச்சயம் நிறைவேற்றுவேன்’ என்றார்.
0 comments:
Post a Comment