• Enter Slide 1 Title Here

    This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 2 Title Here

    This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 3 Title Here

    This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Monday, January 6, 2014

இன்று கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்பட்டு, இயங்காமல் போவதும், இயக்கம் எதிர்பார்த்தபடி இல்லாமையும், அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும். ஆனால், எதனால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அறிந்து கொள்வதும் ஒரு பிரச்னையாக நமக்குத் தோன்றும். பிரச்னைக்குரிய காரணம் ஹார்ட்வேர் சாதனங்களினாலா அல்லது சாப்ட்வேர் தொகுப்பினாலா என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை.

Att your end

ஏனென்றால், இந்த இரண்டு வகை காரணங்களினால் ஏற்படும் பிரச்னைகள் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும். எடுத்துக் காட்டாக, புளு ஸ்கிரீன் ஆப் டெத் எனப்படும் இயக்க முடக்கம், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆகிய இரண்டாலும் ஏற்படலாம். இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டர்: இந்த பிரச்னை எல்லாருக்கும் ஏற்படுவது. அதிக எண்ணிக்கையில், கம்ப்யூட்டர் தொடங்கும்போதே இயங்கத் தொடங்கும் சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னர், கம்ப்யூட்டர் அவற்றின் சுமை தாங்காமல், இயக்க வேகத்தினைக் குறைவாக்கும். அல்லது ஏதேனும் மால்வேர் தாக்கினால், அப்போதும் வேகம் குறையத் தொடங்கும்.

ஆனால், நாம் என்ன எண்ணுகிறோம். கம்ப்யூட்டர் வாங்கி பல ஆண்டுகள் அல்லது மாதங்கள் ஆகிவிட்டன. அதனால், இயக்க வேகம் குறைந்துவிட்டது என்று முடிவு கட்டுகிறோம். இந்த சிந்தனை தொடர்ந்து இருப்பதனால், கம்ப்யூட்டரை மூட்டை கட்டி வைத்துவிட்டு, புதிய கம்ப்யூட்டரை வாங்கிப் பயன்படுத்துகிறோம். இது தவறான கணிப்பாகும். கம்ப்யூட்டரின் செயல்வேகம் குறைகிறது என்றால், அதற்குக் காரணம் சாப்ட்வேர் பிரச்னையாகும். ஹார்ட்வேர் சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டால், இயக்கம் முடங்கிப் போகுமே ஒழிய, வேகம் குறையாது. சில நேரங்களில், சி.பி.யு. அதிக சூடாகிப் போனால், வேகம் குறையலாம். ஆனால், இது எப்போதாவது ஏற்படுவதுதான்.

விண்டோஸ் இயக்கத்தில், அது முடங்கிச் செயலற்றுப் போகும் நிலை ஏற்பட்டால், புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்னும் நிலை காட்டப்படும். ஆனால், புதிய விண்டோஸ் இயக்கத் தொகுப்புகள் பழைய தொகுப்புகளைப் போலின்றி, நிலையாக இயங்குகின்றன. நல்ல ஹார்ட்வேர் சாதனங்களுடன், சிறப்பான ட்ரைவர் புரோகிராம்களுடன் இயங்கும் ஒரு சிஸ்டம், என்றைக்கும் புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்ற நிலைக்குச் செல்லாது.

ஆனால், அடிக்கடி இந்த ஸ்கிரீன் தோன்றினால், உங்கள் ஹார்ட்வேர் சாதனங்களில் ஒன்றில் பிரச்னை இருக்கலாம். அல்லது, தவறான ட்ரைவர் புரோகிராம்களால் ஏற்படலாம். நீங்கள் சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றினை அண்மையில் கம்ப்யூட்டரில் பதிந்திருந்தாலோ, அல்லது ஹார்ட்வேருக்கான ட்ரைவர் புரோகிராம்களை மாற்றியிருந்தாலோ, அந்த நேரத்தினை அடுத்து, புளு ஸ்கிரீன் ஏற்பட்டால், புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திடுங்கள். அல்லது ட்ரைவர் புரோகிராமினை மாற்றுங்கள். ட்ரைவர் புரோகிராம் எதனையும் மாற்றாத நேரத்தில், கம்ப்யூட்டரில் புளு ஸ்கிரீன் தோன்றுகிறது என்றால், நிச்சயமாக உங்கள் சிஸ்டத்தின் ஹார்ட்வேர் சாதனம் ஒன்றில்தான் பிரச்னை என்று உறுதியாகச் சொல்லலாம்.

உங்கள் கம்ப்யூட்டர் பூட் ஆகவில்லை என்றால், இது ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் பிரச்னையாக இருக்கலாம். விண்டோஸ் இயங்கத் தொடங்கி, பாதியிலேயே தன்னை முடக்கிக் கொள்கிறதா? அல்லது கம்ப்யூட்டர் தன் ஹார்ட் ட்ரைவினை உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறதா? அல்லது உள்ளிருக்கும் சாதனங்களுக்கு மின் சக்தி செல்லாமல் இருக்கிறதா? இதற்கெல்லாம் காரணம் நிச்சயம் ஹார்ட்வேர் பிரச்னைகளாகத்தான் இருக்கும். பல்வேறு பிரிவுகளை இணைக்கும் கேபிள்களில் பிரச்னை இருக்கலாம். அல்லது அவை சரியான முறையில் இணைக்கப்படாமல் இருக்கலாம். கீழே, சில ஹார்ட்வேர் பிரிவுகள் தரக்கூடிய பிரச்னைகள் தரப்பட்டுள்ளன.

ஹார்ட் ட்ரைவ்: உங்களுடைய ஹார்ட் ட்ரைவ் செயல்படத் தவறினால், அதில் உள்ள பைல்கள் கெட்டுப் போயிருக்கலாம். பைல் ஒன்றைப் பெற முயற்சிக்கையில் அல்லது ஹார்ட் ட்ரைவில் எழுத முயற்சிக்கையில், ஹார்ட் ட்ரைவ் அதிக நேரம் எடுக்கலாம். இதனால், விண்டோஸ் பூட் ஆகாமல் நின்றுவிடலாம்.

சி.பி.யு. என அழைக்கப்படும் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் இயங்காமல் போனாலும், கம்ப்யூட்டர் இயக்கம் பூட் ஆகாது. சி.பி.யு. அளவிற்கு மேலாக வெப்பமாக ஆனாலும், புளு ஸ்கிரீன் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, கேம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தால், அல்லது வீடியோ ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தால், அதற்கு சி.பி.யு.வின் திறன் அதிகத் தேவை ஏற்பட்டு, சி.பி.யு. சூடாகி, தொடர்ந்து இயங்க முடியாமல், புளு ஸ்கிரீன் காட்டப்படும்.

சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள், தங்களுக்கான டேட்டாவினை ராம் நினைவகத்தில் தற்காலிகப் பயன்பாட்டிற்கு எழுதி வைக்கின்றன. ராம் நினைவகத்தில் பிரச்னை ஏற்பட்டால், இந்த டேட்டாவில் சிறிதளவு மட்டுமே நினைவகத்தில் எழுதப்பட்டு, நமக்கு தவறான முடிவுகள் காட்டப்படும். இது இறுதியில், அப்ளிகேஷன் புரோகிராம் இயக்க முடக்கம், புளு ஸ்கிரீன் மற்றும் பைல் கெட்டுப்போதல் ஆகியவற்றில் முடியும்

கிராபிக்ஸ் கார்டில் பிரச்னைகள் ஏற்பட்டால், அது டிஸ்பிளேயைத் தவறாகக் காட்டும். அல்லது குழப்பமான இமேஜ்களை உருவாக்கும். குறிப்பாக முப்பரிமாண கேம்ஸ் விளையாடுகையில் இது நடைபெறலாம்.

கம்ப்யூட்டரில் சி.பி.யு. மற்றும் பொதுவான விசிறி என இரண்டு வகை விசிறிகள் இயங்கிக் கொண்டிருக்கும். கம்ப்யூட்டர் இயங்கும்போது ஏற்படும் வெப்பத்தினை வெளியேற்றவும், சி.பி.யு. வெப்பத்தினால் தாக்கப்படமால், பாதுகாப்பாக இயங்கவும் இந்த விசிற்கள் செயல்படுகின்றன. இந்த விசிறிகள் செயல்பாட்டில் தொய்வு அல்லது முடக்கம் ஏற்பட்டால், மேலே சொல்லப்பட்ட சி.பி.யு. மற்றும் கிராபிக்ஸ் கார்ட் பிரச்னைகள் ஏற்படலாம்.இதனால், கூடுதல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க, கம்ப்யூட்டர் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, தன் இயக்கத்தை நிறுத்தலாம்.

மதர்போர்டில் ஏற்படும் பிரச்னைகளின் தன்மையினை அறிவது மிகவும் கடினமான செயலாகும். எப்போதாவதுதான் மதர் போர்டு மூலம் பிரச்னை ஏற்படும். ஏற்படுகையில், வேறு அறிகுறிகள் காட்டப்படாமல், புளு ஸ்கிரீன் காட்டப்படும்.

மின் சக்தி பெறுவதிலும், அதனைப் பல்வேறு சாதனப் பிரிவுகளிடையே பங்கிட்டுக் கொள்வதிலும் பிரச்னை ஏற்பட்டால், இதனை அறிதலும் எளிதான செயல் அல்ல. சில வேளைகளில், குறிப்பிட்ட பகுதிக்குத் தேவைக்கு மேல், மின் சக்தி வழங்கப்படலாம். இதனால், அந்தச் சாதனப் பகுதி பழுதடையலாம். செயல்பாட்டில் தவறுகள் ஏற்படலாம். மின் சக்தி முழுமையாக ச் சென்றடையாவிட்டால், கம்ப்யூட்டர் இயங்காது. அதன் பவர் பட்டனை அழுத்தினால் ஒரு மாற்றமும் ஏற்படாது.


Sunday, January 5, 2014

மறு­பக்­கத்தில் உரை­யா­டலில் ஈடு­பட்­டுள்­ள­வரின் முப்­ப­ரி­மாணத் தோற்­றத்தை காட்­சிப்­ப­டுத்தி, அவ­ருடன் நேருக்கு நேர் சந்­தித்து உரை­யா­டு­வது போன்ற உணர்வைத் தரும் மாதிரி தொலை­பே­சியை எதிர்­வரும் வருட இறு­திக்குள் அறி­மு­கப்­ப­டுத்த போலந்து கம்­ப­னி­யொன்று நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்­ளது.

article-2533850-1A5DEB7900000578-948_634x440

1977ஆம் ஆண்டு வெளி­யாகி வசூல் சாதனை படைத்த "ஸ்டார் வார்ஸ்" திரைப்­ப­டத்தின் கதாநாய­கியை குறிக்கும் வகையில் மேற்­படி கம்­ப­னிக்கு யெலிஸா டிஸ்­பிளே சிஸ்டம்ஸ் என பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.


article-2533850-1A6BBD2100000578-211_634x568




இந்த நிறு­வ­ன­மா­னது முப்­ப­ரி­மாண விம்ப உப­கரணங்­களை வெற்­றி­க­ர­மாக ஸ்தாபித்­த­தை­ய­டுத்து, அந்த தொழில்­நுட்­பத்தை உள்­ள­டக்­கிய மாதிரி தொலைபேசியை எதிர்­வரும் வரு­டத்­துக்குள் அறி­மு­கப்­ப­டுத்தவுள்­ளது.இந்தக் தொலை­பேசி எதிர்வரும் 5 வருட காலப்பகுதியில் பொதுமக்களுக்கு பாவனைக்கு விடப்படவுள்ளது.
Posted by V4Tamil .com on 11:05 PM in ,    No comments »

Friday, January 3, 2014

இன்று ஸ்கை ட்ரைவ், இப்போது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மையப் பகுதியாக, அதிலிருந்து நீக்க முடியாத பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், பைல்களை சேவ் செய்திட, ஸ்கை ட்ரைவ் புரோகிராமினை உருவாக்கியது.


02-ga


நமக்குத் தேவை எனில், இதில் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம், நம் பைல்களை இதில் சேமித்து வைக்கலாம். எங்கு சென்றாலும், எந்த கம்ப்யூட்டரிலிருந்தும், நம் பைல்களைப் பெற்று, எடிட் செய்திடலாம். இந்த வசதி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தன் வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பிப் பயன்படுத்துகின்றனர் என்பதனை அறிந்த மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் சிஸ்டத்தின் நீக்க முடியாத ஒரு பகுதியாக ஸ்கை ட்ரைவினை ஏற்படுத்தியுள்ளது. விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், நீங்கள் ஸ்கை ட்ரைவ் புரோகிராம் பயன்படுத்த தனியே ஒரு டெஸ்க்டாப் க்ளையண்ட்டை அமைக்க வேண்டியதில்லை; அல்லது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மேற்கொண்டது போல, விண்டோஸ் ஸ்டோரிலிருந்து எந்த அப்ளிகேஷனையும் தரவிறக்கம் செய்து இயக்க வேண்டியதில்லை.


இது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாகவே தரப்படுகிறது. நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டு அனுபவத்தின் மையப் பகுதியாகவே இது இயங்குகிறது. இத்தகைய இணைப்பு நமக்குச் சொல்வது என்ன? இது போன்று அமைக்கப்பட்டிருப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்று இங்கு பார்க்கலாம். விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன், ஸ்கை ட்ரைவ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதனை, நாம் விண்டோஸ் 8.1 இன்ஸ்டால் செய்திடுகையிலேயே உணரலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நம் தனி விருப்பங்களைஅமைக்கையிலேயே, "SkyDrive is your cloud storage" என்ற செய்தி நமக்குத் தரப்படுகிறது.


நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்களா? அல்லது உங்களுக்கு ஸ்கை ட்ரைவ் தேவையா என்றெல்லாம் கேட்கப்படுவதில்லை. ஸ்மார்ட்போன் கேலரிக்கு ஸ்மார்ட்போன் கேலரிக்கு ஸ்கைட்ரைவ் புரோகிராம் சிஸ்டத்தில் உள்ளது. உங்களுக்குத் தேவை இல்லை என்றால், அதன் இயக்கத்தின் மாறா நிலைகளை மாற்றி அமைக்கலாம். ஆனால், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து அதனை அழிக்க முடியாது. அதன் இயக்கத்தினை நிறுத்த முடியாது. முதலாவதாக, ஸ்டார்ட் ஸ்கிரீனிலேயே, ஸ்கைட்ரைவிற்கான டைலைக் காணலாம்.


இதனைப் பயன்படுத்த நீங்கள் விரும்பவில்லை எனில், அதற்கான டைலை மறைத்து வைக்கலாம். அடுத்து பைல் எக்ஸ்புளோரரில் ஸ்கை ட்ரைவ் பிரிவு கிடைக்கும். இதனை நீங்கள் மறைத்து வைக்க முடியும். நீங்கள் இதனைப் பார்க்கவோ, அல்லது பயன்படுத்தவோ விரும்பவில்லை என்றால், நீங்கள் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் டிற்குப் பதிலாக, லோக்கல் அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்தலாம். நீங்கள் யூசர் போல்டருக்குச் சென்றால், ("C:\Users\Your User Name") அங்கே, மாறா நிலையில் யூசர் போல்டர்களில் ஒன்றாக, Sky Driveஅமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். ஆனால், லோக்கல் யூசர் அக்கவுண்ட் பயன்படுத்துகையில், ஸ்கை ட்ரைவ் போல்டர் கிடைக்காது. இவற்றுடன், ஸ்கை ட்ரைவ் பெர்சனல் கம்ப்யூட்டர் செட்டிங்ஸ் அமைப்பில், தனக்கென ஒரு பிரிவினைக் கொண்டிருப்பதனைக் காணலாம். எனவே, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திலிருந்து, ஸ்கை ட்ரைவினை நீக்க முடியாது.


இதனை அன் இன்ஸ்டால் செய்திடவும் முடியாது. அன் இன்ஸ்டால் ஆப்ஷன் இல்லாமல் தரப்படும் ஒரே அப்ளிகேஷன் ஸ்கை ட்ரைவ் அப்ளிகேஷன் தான். எனவே, நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஸ்கை ட்ரைவ் போல்டர், உங்கள் யூசர் ப்ரபைலில் காணப்படும். பயன்படுத்தாவிட்டாலும் அதன் ஒருங்கிணைக்கும் (synchronization service) சேவையும் எப்போதும் கிடைக்கும் வகையில் தயாராக இருக்கும்.


விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில், ஸ்கை ட்ரைவின் சில மாறா நிலை அமைப்புகளை மட்டுமே மாற்ற முடியும் என்று கூறப்படுகிறது. அவை என்ன என்று இங்கு பார்க்கலாம். வேர்ட், வேர்ட்பேட் அல்லது டாகுமெண்ட் தயாரிக்கப்படும் எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷனில் நீங்கள் ஒரு டாகுமெண்ட்டைத் தயாரித்தால், அது ஸ்கை ட்ரைவின் துணை போல்டராக உள்ள Documents என்பதில் சேவ் செய்யப்படும். முந்தைய விண்டோஸ் சிஸ்டத்துடன் ஒப்பிடுகையில், இதில் ஒரு முக்கிய மாற்றம் உள்ளது. விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்களில் டாகுமெண்ட் தயாரிக்கையில், அவை மாறா நிலையில், Documents லைப்ரேரியில் சேவ் செய்யப்படும்.


விண்டோஸ் 8.1 சிஸ்டம் சேவ் செய்திடும் இடம் பிடிக்கவில்லை என்றால், அதனை விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 சிஸ்டம் சேவ் செய்திடும் Documents லைப்ரேரிக்கு மாற்றிக் கொள்ளலாம். உங்களுடைய போல்டரில் காணப்படும் போட்டோக்கள் அனைத்தும் ஸ்கை ட்ரைவிற்குத் தானாக அப்லோட் செய்யப்படும். இந்த போல்டர் Pictures லைப்ரேரியில் இருக்கும். உங்கள் கம்ப்யூட்டரின் கேமரா அப்ளிகேஷன் இங்குதான் அனைத்து போட்டோக்களையும் சேவ் செய்திடும். பின்னர், விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில், இவை ஸ்கை ட்ரைவிற்கு அனுப்பப் படுகின்றன.


இதனையும் நீங்கள் விரும்பினால் மாற்றிக் கொள்ளலாம். விண்டோஸ் 8.1, பைல்களை ஸ்கை ட்ரைவ் மூலம் ஒருங்கிணைத்து க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் சேவ் செய்வது நமக்கு நல்லதுதான். பைல்களை எங்கிருந்தும் பெறலாம்; மேலும் அவை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். ஆனால், சிலர், மைக்ரோசாப்ட் நம் மீது திணிக்கும் நடைமுறையாக இதனைக் கருதுகின்றனர். இதனால், பிரச்னை வரலாம் என எதிர்பார்க்கின்றனர். ஒவ்வொரு பயனாளரும் இது குறித்து தங்களின் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் உங்களுக்கு உகந்தபடி செயல்படலாம்.


Posted by V4Tamil .com on 5:00 AM in ,    No comments »

Thursday, January 2, 2014

கடந்த 16 ஆம் நூற்றாண்டு வரை எல்லோரும் சூரியனும் கிரகங்களும் பூமியை சுற்றி வருகிறது என எண்ணியிருந்தனர். கடந்த 19 ஆம் நூற்றாண்டு வரை காலரா மற்றும் பிளேக் போன்ற தொற்று நோய்கள் அழுகும் பொருட்களில் உள்ள துகள்கள் காற்றில் கலப்பதால் பரவி வருகின்றன என்று எண்ணியிருந்தார்கள்.


கடந்த 20 ஆம் நூற்றாண்டு வரை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக அசுத்த இரத்தத்தை வெளியேற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதிக்கும் நோய்களும் வெளியேறலாம் என்று இதை செய்து வந்தனர். இத்தகைய தகவல்களை உண்மை என்று நம்மை எண்ண வைத்த முன்னோர்கள் இப்போதும் உலகம் உருண்டையாக உள்ளதென்றும், ஐஸ் கிரீம்கள் நம்மை பருமனாக்கும் என்ற தவறான கருத்துக்களை நம்ப வைக்கின்றனர். பெருமளவில் வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இந்த காலத்தில் இத்தகைய தவறான நம்பிக்கைகளையும் நாம் கைவிட மறுக்கிறோம். இத்தகைய தவறான கணிப்புகளையும், எண்ணங்களையும் இக்கட்டுரையில் காண்போம். அதிலும் இந்த குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் முதலில் சரி என்று எண்ணிய பின் மேற்கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியால் இது தவறு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது அப்படி உண்மை என்று நினைக்கும் சில பொய்யான விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

தலையில் தொப்பி போடு அல்லது உனக்கு மிகுந்த சளி பிடிக்கும்' இப்படி எல்லா அம்மாகளும் குளிர்காலம் வந்தவுடன் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இது சகஜம் தான். இது சம்மந்தமான பல கணிப்புக்களும் ஆராய்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. இந்த அடிப்படையில் குளிர்காலத்தில் வெளியே செல்பவர்களை விட குளிர்காலத்தை அனுபவிக்காதவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது நிருபணமான உண்மை. இதில் ஈரமான தலை அல்லது ஈரமில்லாத தலை என்றெல்லாம் எந்தவித வித்தியாசமும் கிடையாது.


01-1388564041-2-sweet



அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேசனின் பத்திரிக்கை குழந்தைகளையும் சர்க்கரையையும் வைத்து 23 ஆராய்ச்சி பாடங்களை வெளியிட்டது. அதன் முடிவு சர்க்கரை குழந்தையின் நடத்தையை பாதிப்பதில்லை. ஆனால் இது உண்மையானதாக நம்மில் திணிக்கப்பட்டுள்ளது.


98 சதவிகித உடம்பில் உள்ள சூடு தலை வழியாக இறங்குகின்றது எனவும், ஆதலால் தான் குளிர்காலத்தில தொப்பி அணிய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நியூயார்க் டைம்ஸ் மற்றும் பிற இடங்களிலும் கூறுவது உங்கள் உடம்பில் இருந்து வெளியேரும் சூட்டின் அளவு பெரும்பாலும் பரப்பளவை பொறுத்ததே - தொப்பி அணியாத தலையை விட குளிர் நாளில் விரிவடைந்த கால்கள் மூலமோ அல்லது கைகள் மூலமோ தான் அதிக சூடு வெளியேறுகிறது.01-1388564047-3-drymouth
சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படும் இது நியாயமானதாக தோன்றினாலும் உண்மையல்ல. சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படாது. மேலும் எந்த சான்றும் இதை நிரூபிக்கவும் இல்லை மற்றும் சிறிய ஆராய்ச்சிகள் இவற்றில் நடத்தப்படும் போது, சுடக்கு உடைக்கும் பழக்கம் உடையவர்களுக்கும் சுடக்கு உடைக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் மூட்டு வீக்கம் ஏற்படுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று வெளிவந்தது. மருத்துவத்துறையில் சுடக்கு உடைப்பதால் எழும்பை சுற்றியுள்ள தசை நார்களில் ஏற்படும் காயங்களுக்கும் அல்லது தசை நார்கள் இடப்பெயர்வுக்கும் தான் இணைப்பு இருப்பதே தவிர சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படுவதற்கான இணைப்பு இல்லை.01-1388564053-4-hands


நெப்போலியின் பிரெஞ்ச் நாட்டு அரசர். அவரது உயரம் 5 அடி 2 அங்குலம் என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் பல வரலாற்று வல்லுனர்கள் தற்போது அவரது கூடுதல் உயரத்தை தந்துள்ளனர். அவர் பிரெஞ்ச் யூனிட்ஸ் பயன்படுத்தி அவரது உயரம் 5 அடி 2 அங்குலம் என்று கணக்கிடபட்டுள்ளது. இந்த பிரஞ்ச் யூனிட்ஸ்சை இம்பீரியல் யூனிட்ஸ்சாக மாற்றப்பட்டால் அவரது உயரம் 5 அடி 7 அங்குலம் என்று மாறுகிறது. இந்த உயர அளவு பொதுவான பிரெஞ்ச் நாட்டு மனிதரின் சராசரி உயரத்தை விட அதிகமாவே உள்ளது.

உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும் ‘வாம் அப்' அல்லது உடற்பயிற்சிக்கு முன் கால், கைகள் மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் ஸ்ட்ரெட்ச் செய்த பின் பயிற்சியை ஆரம்பித்தால் உங்களது செயல் திறன் அதிகரிக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதை மறுக்கின்றனர். ஸ்ட்ரெட்ச் செய்து பின்னர் ஓடினால் அது 5 சதவிகிதம் குறைச்சலான இயக்கு திறன் காணப்படும். அதே சமயத்தில் இத்தாலிய வல்லுனர்களின் கருத்துப்படி ஸ்ட்ரெட்ச் செய்வதால் செயல் திறன் குறைகிறது.மேலும் இந்த கூற்று சான்றுகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை.


01-1388564063-6-stretch
முட்டையில் உள்ள கொழுப்பு இதயத்திற்கு கேடு விளைவிக்கும் உணவில் சேர்க்கப்படும் கொழுப்பு வகைகளும் அது ஏற்படுத்தும் பாதிப்புக்களும் மற்றும் அதற்கான உணவு கட்டுப்பாட்டு முறைகளும், இரத்த குழாய் சார்ந்த நோயை உண்டாக்குபவை பற்றிய ஆராய்ச்சியில் 1960-ல் சிறிதளவு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உருவாகியுள்ளது. ஆனால் இதை தவறு என்று உணர்த்த மிருகங்களிடையே தேவையை விட அதிக அளவு கொழுப்பு சத்தை சேர்த்த போதும், அது உடலில் கொழுப்பை அதிகப்படுத்தவில்லை.


01-1388564069-7-egg


நாயின் ஏழு வயது ஒரு மனித ஆண்டு மூன்று வயது நிரம்பிய நாய்க்கு மனிதர்களின் வாழ்நாளில் 21 ஆண்டுகள் என்பது சரியா? வல்லுநர்கள் இதை தவறு என்கிறார்கள். ஒருமித்த கருத்து என்னவென்றால் மனிதர்களை விட நாய்களின் முதிர்ச்சி வேகமாக இருக்கும். 21 ஆண்டு முதிர்ச்சியை இரண்டு ஆண்டுகளில் அடைந்து பின்னர் மெதுவாக குறைந்து ஒரு வருடத்திற்கு நான்கு மனித ஆண்டாக மாறும். டாக் விஸ்பரர் சீசர் மில்லன் நாயின் மனித ஆண்டை பின் வருமாறு கணக்கிட வேண்டும் என்கிறார்: நாயின் வயதில் இரண்டை கழித்து அதை நான்கால் பெருக்கி அதோடு 21-ஐ கூட்ட வேண்டும். என்ன கணக்கு புரிந்ததா?

01-1388564073-8-labradordog


ஜார்ஜ் வாஷிங்டனுக்கு மரத்தாலான பற்கள் இருந்தது 20 வயதிலிருந்தே பற்களை இழக்க நேர்ந்த முதல் அமெரிக்க ஜனாதிபதிக்கு மரத்தால் ஆன பற்கள் இருந்தது என்பது தவறான கூற்று. அவருக்கு பற்கள் விழுந்தது உண்மை தான். அவரிடம் நான்கு பொய்யான பற்கள் இருந்தது அவை தங்கம், நீர்யானை தந்தம், ஈயம், மனித மற்றும் மிருகங்களின் பற்களால் ஆனவை. அக்காலத்தில் கழுதை மற்றும் குதிரையின் பற்கள் உபயோகப்படுத்தப்பட்டன. இந்த பற்களை ஒன்றாக பிடித்துக் கொள்ள பற்களுக்கிடையே போல்ட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் திறப்பதற்கு உதவியாக ஸ்பிரிங்கும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வகை முயற்சி அவருக்கு பிடித்த உணவான மேரி வாஷிங்டனின் சுவையான ஜிஞ்சர் பிரட் ஆகியவற்றை உண்ண முடிந்தது.


Posted by V4Tamil .com on 10:00 AM in ,    No comments »

பிரிட்டனை சேர்ந்த ஜேசன் ரூகே என்பவர் மணித்தியாலத்துக்கு 177 கிலோமீற்றர் (112 மைல் ) வேகத்தில்   பயணிக்க கூடிய துவிச்சக்கர வண்டியொன்றை தயாரித்துள்ளார்.


3618Martin


மோட்டார் சைக்கிளோட்டப் பந்தய வீரரான கை மார்ட்டினின்  கோரிக்கையின் பேரில் இந்த துவிச்சக்கர வண்டியை ஜேஸன் ரூகே தயாரித்தார். இந்த சைக்கிளில்  கை மார்ட்டின் 181 கிலோமீற்றர் ((112.94 மைல்) வேகத்தில் பயணித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.


இதற்குமுன் நெதர்லாந்தைச் சேர்ந்த செபஸ்ட்டியன் போவியர் 133.78 கிலோமீற்றர் வேகத்தில்  துவிச்சக்கர வண்டியில் பயணித்தமையே உலக சாதனையாக இருந்தது.41 வயதான ஜேசன் ரூகே துவிச்சக்கர வண்டி தயாரிப்பு நிலையமொன்றை நடத்தி வருகிறார்.   இந்த துவிச்சக்கரவண்டியைத் தயாரிப்பதற்கு 10 நாட்கள் தேவைப்பட்டதாகவும் இதற்காக   5000 ஸ்ரேலிங் பவுண்களை செலவிடப்பட்டதாகவும்  தெரிவித்துள்ளார்.





Posted by V4Tamil .com on 4:46 AM in ,    No comments »

Tuesday, December 31, 2013

ஆசியா அறிவியல் என்பதில் மிகப்பெரும் அளவிற்கு வளர்ந்துள்ளது எனலாம், இன்று வெளிநாடுகளில் உள்ள பல விஞ்ஞானிகள் ஆசிய நாட்டை சார்ந்தவர்கள் தான். ஆனால் இன்று பல்வேறான மக்கள் அறிவியலை தவறாக புரிந்து கொண்டிருகிறார்கள். அதாவது சில இயற்கையான விஷயங்களை தான் சொல்கிறேன் .ரெக்னாலஜியும் அறிவியலும் ஒன்றுதான் அறிவியலின் உதவியுடன் தான் ரெக்னாலஜி இயங்கிக் கொண்டிருகிறது. ஏனெனில் அறிவியலையும் ரெக்னாலஜியையும் சரியாக புரிந்து கொள்வது என்பது இன்றியமையாதது. இப்பொழுது அறிவியலில் நாம் தவறாக புரிந்து கொண்ட சில விஷயங்களைப் பற்றிப் பார்ப்போமா.

வைரம் வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா. ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தைனை பேருக்கு தெரியும். அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மையில் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள். ஆனால் பூமிக்கு அடியில் 90 மையில் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும். 2 மையில் தெலைவில் வெறும் நிலக்கரி மட்டுதான் கிடைக்கும்.09-1386573796-d1


வௌவால் ஒரு வித்தியாசமான உயிரினம் இவைகளுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான் . ஆனால் இந்த உரினத்தால் பார்க்கவும் முடியும் . இவைகள் தங்கள் மீஒலி எனப்படும் சத்தத்தை எழுப்பி அதன் மூலம் தனக்கு எதிரில் என்ன பொருள்கள் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும் தன்மை கொண்டது.


09-1386573794-b4


எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். பலர் கூறுவது என்னவென்றால் இந்த கட்டிடத்தின் உயரத்திலிருந்து ஒரு நாணயத்தை ஒருவர் மீது எரிந்தால் அந்த நாணயம் அவரை கொன்றுவிடும் என்பதாகும். ஆனால் இது தவறான கூற்று ஏனெனில் கட்டிடத்தின் உயரத்திலிருந்து விழும் நாணயத்தின் வேகத்தின் அளவானது 1 மணி நேரத்திற்க்கு 50 மைல் தொலைவு என்ற வேகத்தில் தான் விழும் . அதானல் இந்த வேகத்தினால் ஒருவரை கொல்ல முடியாது.09-1386573797-e3
சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம்பாயாது . ஆனால் தண்ணீரில் நின்று மின்சாரக் கம்பியய் பிடித்தால் மின்சாரம் பய்கிறதே அது ஏன் என்று கேட்க்கலாம். பொதுவாக தண்ணீரில் பல வகையான மினரல்கள் மற்றும் அழுக்குகள் படிந்திருப்பதால் அதில் மின்சாரம் பாய்கிறது. ஆனால் சுத்தமான நீரில் இப்படிப்பட்ட தாதுக்கள் இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.09-1386573801-water2மனிதனின் மருக்கள் உருவாகக் காரணம் தவளைகள் மற்றும் தேரைகள் என்று பலரும் கருதுகின்றனர் இது தவறான கூற்றாகும். இதற்க்கு காரணம் தேரைகள் அல்ல மனிதர்கள் தான் மருக்கள் இருக்கின்ற ஒருவரிடம் கைகளைக் குலுக்கினால் இவ்வாறான மருக்கள் தோன்றும் என்று அறிவியல் அறிஞர்கள் பலர் கூறியுள்ளார்கள்.09-1386574184-p5


தீக்கோழியை யாராவது அச்சுறுத்தினால் அவற்றின் தலையை மணலில் புதைத்துக்கொள்ளும் என்று சிலர் கூறுவார்கள். ஆனால் அவற்றினை அச்சுறுத்தினால் அவைகள் இறந்தவைகளைப் போல செயல்பட்டு தப்பிக்க முயலுமாம்.09-1386573799-o6


மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்ல அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது. ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்.

09-1386573795-b7

Posted by V4Tamil .com on 7:00 AM in ,    No comments »

விண்வெளியிலிருந்து பூமியை பார்க்க நீங்கள் ஆர்வமாக இருக்கின்றீர்களா? உங்களது ஆர்வத்தை தீர்த்து வைக்க அமெரிக்க நிறுவனமொன்று தயாராகியுள்ளது.



விண்வெளியிலிருந்து புவியின் வடிவத்தினையும் சில நிமிடங்களுக்கு பூச்சிய நிறை நிலையை அனுபவிக்கும் நோக்கில் இச்சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணத்தில் சூப் விருந்தும் நட்சத்திரங்களுடன் ஸெல்பீ படங்களும் எடுக்கக்கூடியதாக இருக்கும்.


இதனை அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைத் தளமாகக்கொண்ட வேர்ல்ட் வீவ் என்டர்பிரைஸஸ் என்ற நிறுவனம் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளவுள்ளது.





புவியின் மேற்பரப்பிலிருந்து 19 மைல் தொலைவுக்கு ஹீலியம் வாயு பலூனில் 8 பேரை அழைத்துச் செல்ல இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக நேற்றுமுன்தினம் அறிவித்துள்ளது. இப்பயணம் தொடர்பில் இம்மாதத்தின் ஆரம்பத்தில் குறித்த நிறுவனம் அறிவித்திருந்தது.


விண்வெளியிலிருந்து எமது கிரகத்தின் ஆச்சரியங்களை ரசிக்கும் இச்சுற்றுலாவிற்கான கட்டணம்தான் தலையைசுற்ற வைக்கிறது. சுமார் எட்டரை மணிநேர பலூன் பயணத்துக்கு 75,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் ஒரு கோடி ரூபா)  மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டள்ளது.


இச்சுற்றுலாவுக்கு 40 மில்லியன் கன மீற்றர் ஹீலியம் பலூன் பயன்படுத்தப்படவுள்ளது. அதாவது ஒரு கால்பந்தட்ட மைதானத்தின் அளவினை ஒத்தது. விமானமொன்றுடன் இணைத்து இந்த பலூன் நியூ மெக்ஸிகோ பாலைவனத்திலுள்ள சேர் ரிச்சர்ட் ப்ரன்ஸன்ஸ் ஸ்பேஸ்போர்ட்டிலிருந்து மேலெழும்பவுள்ளது.




இச்சுற்றுலா குறித்து பயணத்தை ஏற்பாடு செய்துள்ள குறித்த நிறுவத்தில் நிறைவேற்று அதிகாரி ஜேன் பொய்ன்டர் கூறுகையில், 'சில மணி நேரங்களுக்கு விண்வெளியிலிருந்து புவினைக் காணும் அனுபவத்தினை மக்களுக்கு கொடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.


'இப்பயணத்தில் 6 பயணிகளும் 2 பணியாளர்களும் பயணிக்கவுள்ளனா. புவியின் எல்லையை அடைய ஒன்றரை மணி நேரமாகும். பயணிகள் இரண்டரை மணிநேரம் பூமிக்கு மேல் மிதக்கலாம். பின்னர் 20-40 நிமிடத்தில் தரை இறங்கலாம். இதற்கு பயணிகளுக்கு எதுவிதமான பயிற்சிகளும் தேவையில்லை. பாதுகாப்பானது.' என்கிறார் பொய்ன்டர்.


உயர்தர சொகுசான அனுபவமாக இதனை நினைக்கலாம் என தெரிவித்துள்ளார் பொய்ன்டரின் கணவரும் நாஸாவின் பாதுகாப்பு பொறிமுறை வடிவமைப்பாளராக இருந்த டபெர் மெக்கலம். இந்த தம்பதியினர் செவ்வாயில் மனித வாழ்க்கை குறித்து அரிசோனாவில் ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


கண்டறிந்த ஆண்டு: 1801 ஆகும். அக்காலத்தில் அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் வலி காரணமாகவே அறுவை சிகிச்சை செய்து கொள்ளாதவர்கள் அதிகம். மயக்கமருந்துகண்டுபிடிக்கப்பட்டதாலேயே பல உயிர்களை மருத்துவரீதியாகக் காப்பாற்ற முடிந்தது என்பதை யாரும் மறுக்கவே முடியாது. அத்தகைய மயக்க மருந்து எவ்விதம் யாரால் கண்டறியப்பட்டது என்று காணலாம்.


26.4-Humphry-Davy


1846ல், Oliver Wendell Holmes என்பவரால்


உணர்ச்சியற்ற எனும் பொருள் தரும் அனஸ்தீசியா எனும் கிரேக்க மொழிச் சொல் பயன்பாட்டுக்கு வந்தாலும், இந்த மயக்க மருந்து முறை என்பது பல மருத்துவர்களாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன்பே செயல்பாட்டில் இருந்து வந்தது தான். முற்கால சீன மருத்துவர்கள் மூளைக்குச் செய்தி அனுப்பும் நரம்புகளை அக்குபஞ்சர் ஊசிகளின் மூலம் நிறுத்தி வைத்து அறுவை சிகிச்சையின் போது வலியேற்படாமல் தவிர்த்திருக்கின்றனர். ரோமானிய மற்றும் எகிப்திய மருத்துவர்கள் மாண்ட்ரகோரா எனும் செடியின் வேரை (மான்ட்ரேக்) பயன்படுத்தி நோயாளிகளை மயக்கமுறச் செய்திருக்கின்றனர். கோக்கோ இலைகளைக் கடித்து மென்று அதன் சாறைப் புண்களின் மீது துப்பி அதன் மூலம் வலியைக் குறைக்கச் செய்ததும் உண்டு.


19ம் நூற்றாண்டில் மூன்று வெவ்வேறு அறிவியலாளர்கள் நவீன அனஸ்தீசிய முறையைக் கண்டறிந்ததாகக் கூறினாலும், அதற்கு முன்பே ஹம்ஃப்ரி டேவி இம்முறையைக் கண்டறிந்து விட்டார்.


ஸ்காட்லாந்தில் சர் யங் சிம்ப்சன் க்ளோரோபார்ம் எனப்படும் மருந்தை பஞ்சில் முக்கி அதை நுகரச் செய்வதன் மூலம் மயக்க நிலையை எட்டச் செய்யும் முறையைக் கண்டறிந்தார். 1838ல் விக்டோரியா ராணி தனது ஏழாவது குழந்தையைப் பிரசவிக்கும் போது க்ளோரோபார்மைப் பயன்படுத்தும் வரை அந்த முறை பிரபலமடைந்திருக்கவில்லை. அதன்பின்னர் க்ளோரோபார்ம் வரலாற்றில் பல போர்களில் முக்கியமாக அமெரிக்க சிவில் யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.


ஜார்ஜிய மருத்துவர் க்ராஃபோர்ட் லாங் ஈதரைப் பயன்படுத்தி வலியைக் குறைக்க முயற்சி மேற்கொண்டார். ஒரு நீதிபதியின் கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சையின் போது ஈதரைப் பயன்படுத்திச் சிறப்பாக அறுவை சிகிச்சையைச் செய்து முடித்தார். அந்த நீதிபதி எந்த ஒரு வலியையும் உணர முடியவில்லை. 1842ல் இதைச் செய்த லாங் இதை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. இரண்டாண்டுகள் கழித்து பாஸ்டனில் வெல் எனும் பல்மருத்துவர் ஈதரைப் பயன்படுத்தி வலியைக் குறைப்பதை அறிந்து கொண்டார். ஆனாலும் அவர் அறுவைசிகிச்சையின் போது ஈதரைச் செலுத்தும் அளவைக் குறைத்ததால் விரைவிலேயே வலியால் நோயாளி துடித்து விட்டார்.


1845ல் போஸ்டனின் இன்னுமொரு பல்மருத்துவர் வில்லியம் மார்ட்டன் மீண்டும் ஈதரைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சையைச் செம்மையாகச் செய்து முடித்தார். அவரது மயக்கமருந்தாக ஈதரைப் பயன்படுத்தும் முயற்சி குறித்த கட்டுரைகளே பின்னர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மருத்துவர்கள் பலரும் ஈதரை முதன்மையான மயக்கமருந்தாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.


இவ்வாறு மூவர் மயக்கமருந்து குறித்துக் கண்டறிந்திருந்தாலும், ஹம்ஃப்ரி டேவி 1801 லேயே நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனைக் கலந்து நைட்ரஸ் ஆக்சைடைக் கண்டறிந்து அதற்கு சிரிப்பூட்டும் வாயு என்று பெயரும் இட்டார். அதிகமாக அதை உட்கொண்டால் மயக்கமும் நேரிட்டதைக் கண்டறிந்த அவர், அதனை மருத்துவமனைகளில் நோயாளிகளின் வலியைக் குறைக்கப்பயன்படுத்தலாம் என்று குறிப்பும் எழுதி வைத்தார்.


யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் கூட டேவி தான் முதன்முதலில் நவீன மயக்கமருந்து குறித்த கண்டுபிடிப்பை நிகழ்த்தினார் என்பதே உண்மை.

இலங்கை மின் உதி­ரிப்­பாகம் மற்றும் கைய­டக்க தொலை­பேசி ஆகிய துறை­களில் புதிய புரட்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நாட்டின் முன்­னிலை மின் உதி­ரிப்­பாக நிறு­வ­ன­மான ஒரெஞ்ச் முதற்­த­ட­வை­யாக அதி­ந­வீன தொழில்­நுட்­பங்­களை உள்­ள­டக்­கிய கைய­டக்க தொலை­பே­சி­களை சந்­தைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.


2


ஹொங்­கொங்கில் அமைந்­துள்ள டெலி டோக் நிறு­வ­னத்­துடன் இணைந்து ஒரெஞ்ச் நிறு­வனம் இந்த நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்­ள­துடன் அதற்­கான வைபவம் கொழும்பு கல­தாரி ஹோட்­டலில் அண்­மையில் நடை­பெற்­றது.


“ எமது நிறு­வனம்் டெலி டோக் நிறு­வ­னத்­துடன் இணைந்து கைய­டக்க தொலை­பே­சி­களை மாத்­தி­ர­மன்றி மின் உதி­ரிப்­பா­கங்­க­ளையும் எதிர்­கா­லத்தில் உற்­பத்தி செய்யும். கைய­டக்க தொலை­பேசி, மின் உதி­ரிப்­பாகம் ஆகிய இரண்டு துறை­க­ளையும் ஒரே துறை­யாக மாற்­று­வதே எமது நோக்கம்” என ஒரெல் கோப்­ப­ரேஷன் நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவ பணிப்­பாளர் குஷான் கொடி­து­வக்கு தெரி­வித்தார்.


கலர் போ ஒரெஞ்ச் கைய­டக்க தொலை­பே­சிகள் X40, X 200, F 3, F 2, X110 ஆகிய வடி­வங்­களில் சந்­தைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் மின்­சா­ர­முள்ள வீடு­க­ளி­லுள்ள மின் உப­க­ர­ணங்­களை கைய­டக்க தொலை­பேசி ஊடாக கட்­டுப்­ப­டுத்தக் கூடிய புதிய அப் (App) ஒன்­றையும் தமது நிறு­வனம் தயா­ரித்­துள்­ள­தாக ஒரெஞ்ச் நிறு­வ­னத்தின் கைய­டக்க தொலை­பேசி பிரிவின் பொது முகா­மை­யாளர் கிஹான் சிகேரா தெரி­வித்­துள்ளார்.


பாவ­னை­யா­ளர்­களின் வேண்­டு­கோ­ளுக்கு அமைய உற்­பத்தி செய்­யப்­பட்­டுள்ள புதிய அப் மூலம் மின்­சார குமிழ்­களின் வெளிச்­சத்தை குறைத்தல், மின்­கு­மிழ்­களை எரிய வைத்தல், அணைத்தல், அலாரத்துக்கு அமைய மின் உபகரணங்களை எரியவிடுதல், வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்தவுடன் மின்குமிழ்கள் தானாக ஒளிர்வது உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை இதன்மூலம் மேற்கொள்ளலாம்

Monday, December 30, 2013

ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல், முதற் தட­வை­யாக நாட்டில் அறி­முகம் செய்யும் சேவைகள் வரி­சையில்் இம்­முறை மொபிடெல் Huawei உடன் கைகோர்த்­துள்­ளது. Huawei Ascend Y220 ஸ்மார்ட்­போன்­க­ளுக்கு புதிய ஒப்­பந்த திட்டம் ஒன்று அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது.


184141-1


மொபிடெல் வாடிக்­கை­யா­ளர்கள் இதற்­கென 18 மாத கால ஒப்­பந்தம் ஒன்றைச் செய்­து­கொள்ள வேண்டும். இந்த ஒப்­பந்தம் விஷேட பாவ­னைக்குப் பிந்­திய மொபிடெல் கட்­டண முறை­யொன்­றுடன் கூடி­யது. மாதாந்த அடிப்­ப­டையில் பின்­வரும் உள்­ளம்­சங்கள் இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டு­கி­றது. 2GB டேடா, 100 M2M நிமி­டங்கள் மற்றும் 500 M2M குறுந்­த­க­வல்கள் போன்­றன வழங்­கப்­படும். இந்த ஒப்­பந்­தத்தில் கையொப்­ப­மிடும் போது, ஆரம்பக் கட்­ட­ண­மாக ரூபா 10,000/- வைச் செலுத்த வேண்டும்.


ஒப்­பந்த கால முடிவில் வாடிக்­கை­யாளர் புதிய ஸ்மார்ட்­போனைப் பெற்­றுக்­கொள்ள முடியும்.


Huawei Ascend Y220 ஸ்மார்ட் போன் இரட்டை SIM பாவனை கொண்­டது. 3.5 அங்­குல தொடுகை திரை, 0.3MP சக்தி கொண்ட பின் பக்க கெமறா மற்றும்் RAM 256MB அதி உயர் நினை­வாற்றல், 512 MB ROM, நுண் SD கார்ட், (32G வரை) என­பன போன்ற பண்­பு­க­ளோடு கறுப்பு நிறத்தில் கிடைக்­கின்­றது.

Sunday, December 29, 2013

ஆம். நம்பமுடியாவிட்டாலும் உண்மைதான். ஆனால் இங்கல்ல. நமது அயலவர்களிடம். பூமியின் விண்வெளி அயலவர்களான யுரேனஸ் மற்றும் நெப்டியூனில், பூமியின் அனைத்து நகைக்கடைகளில் உள்ளவற்றிலும் பார்க்க அதிகளவான வைரங்கள் உண்டு. அந்த இரு கிரகங்களிலும் வைரங்கள் வளிமண்டலத்திலிருந்து இருந்து மழைத்துளியைப் போல் விழும் என்ற கோட்பாடு உள்ளது.

யுரேனஸ் மற்றும் நெப்டியூனில் உயர் விகிதத்தில் மீத்தேன் (methane) உள்ளது. இந்த கிரகங்களில் காணப்படும் உயர் வெப்பநிலை மற்றும் அழுத்தம் காரணமாக இது வைரம் அல்லது சிக்கலான ஆர்கானிக் உட்பொருட்களாக மாறிவிடுமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  ஆராய்ச்சி  முடிவுகள், அமுக்கம் 19 GPa ஆகவும் வெப்பநிலை 2200 முதல் 3000 டிகிரி கெல்வின் ஆகவுமுள்ள நிலையில் மீத்தேன் வைரமாக மாற்றமடைவதாக கூறுகின்றன. மீத்தேனை வைரமாக மாற்றுவதில் முதன்மைக் காரணியாக வெப்பநிலை உள்ளபோதிலும் வளிமண்டல அழுத்தத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

வைரங்கள் விழுவதால் வெளியிடப்படும் சக்தி நெப்டியூனின் காந்தசக்தியை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. இதனால் இக்கிரகத்தின் வெப்பக் கதிர்வீச்சும் அதிகரிக்கும். வைர மழை ஒரு நிரூபிக்கப்பட்ட நிகழ்வு இல்லை என்றாலும், இதற்குரிய சாத்தியங்களும் இருப்பதாக வாதங்கள் உள்ளன.

மொபைல் உலகில் மிக குறுகிய காலத்தில் சாம்சங்கின் முக்கிய போட்டியாளராக வந்துவிட்டது லினோவா அந்த அளவுக்கு அதன் மொபைல் மாடல்கள் இன்று மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. லினோவாவின் மொபைல் வெற்றி வரிசையில் அடுத்து வெளிவந்திருப்பது லினோவா வைப் X (Lenovo Vibe X) ஆகும்.


27-untitled


இந்த மொபைலில் என்னென்ன இருக்குன்னு அப்படியே ஒரு ரவுன்ட் பார்க்கலாமாங்க 5 இன்ச் நீளம் கொண்ட இந்த மொபைல் கொரிலா கிளாஸூடன் வெளிவருதுங்க. மேலும் இதில் Quad-core Cortex A7 பிராஸஸர் 1.5 GHz இருக்குதுங்க மற்றும் 2 GB க்கு ரேம், ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஓ.எஸ் என அனைத்தும் இதில் இருக்குதுங்க.


அடுத்து கேமராவ பாத்தா 13MP க்கும் பிரன்ட் கேமரா 5MP க்கும் இதுல இருக்குங்க கேமரா கிளாரிட்டியும் அப்ப நல்லா இருக்கும்னு எதிர்பாக்கலாம்ங்க. இதோட எடை 121 கிராம்ஸ் 2000mAh பேட்டரி கொடுத்திருக்காங்க மேலும் 16GB க்கு இன்பில்டு மெமரியும் இதுல இருக்குது என்பது மேலும் ஒரு கொசுறு தகவல்ங்க


இதோ விலை ரூ.82000ங்க.(இலங்கை)




Posted by V4Tamil .com on 6:00 AM in ,    No comments »

Wednesday, December 25, 2013

elephant-painting-itself1


பூமியில் வாழும் விலங்குகளில் மிகவும் புத்திசாலியான விலங்கு யானை ஆகும். சிங்கம் காட்டுக்கு ராஜாவாக இருந்த போதிலும் யானையைப் போன்று துணிச்சலானது என்று சொல்லிவிட முடியாது. யானை சுறுசுறுப்பானது அத்துடன் பெருந்தன்மை மிக்கது.யானையிடம் நீங்கள் அன்பு காட்டினால் அதனை எப்போதும் அது மறப்பதில்லை. பத்து, இருபது வருடங்கள் சந்திக்காமல் இருந்தாலும் அது உங்களை அடையாளங் கண்டு சந்தோஷப்படும்.






மனிதனைப் போலவே யானைகளும் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கின்றன. யானை 22 மாதங்கள் கருவைச் சுமக்கிறது.நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன் நைல் நதிக்கரைகளில் மெயெரித்திரியம் என்ற விலங்கு தோன்றியது. அது ஒரு பன்றியின் அளவாக இருந்தது. அதில் இருந்து இன்றைய யானைகள் உருவாகியதாக உயிரியலாளர்கள் கூறுகின்றார்கள்.


மணிக்கு நாற்பது கிலோமீற்றர் வேகத்தில் யானைகளால் ஓட முடியும். யானைகள் தமது தந்தங்களைக் கொண்டு பல தொழில்களைச் செய்கின்றன. மண்ணைத் தோண்டுகின்றன. எதிரிகளுடன் சண்டை இடுகின்றன. கனமான பொருட்களைத் தூக்கிச் செல்கின்றன. பெரிய நீர்நிலைகளைக் கடந்து செல்லும் போது தந்தங்களில் தமது குட்டிகளைச் சுமந்து செல்கின்றன.


தந்தங்கள் சில சமயங்களில் உடைந்துவிடும். அதனால் யானைகளுக்கு பாதகம் இல்லை. தும்பிக்கை தான் முக்கியமானது. இதன் மூலமே யானைகள் சுவாசிக்கின்றன. நீரை உறிஞ்சி வாய்க்குள் பீச்சிக் குடிக்கின்றன. தழைகளையும், குழைகளையும் ஒடித்து வாயில் போட்டுக் கொள்ளுகின்றன. அது மட்டுமல்ல சேற்றை வாரித் தமது முதுகில் போட்டுக்கொள்ளவும் தும்பிக்கைகளைப் பயன்படுத்துகின்றன. யானைகள் தமக்குள் பேசிக் கொள்ளும் திறன் வாய்ந்தவை. முனகல்கள் மூலமாகவும், உரக்கப் பிளிறுதல் மற்றும் பலவித ஓசைகள் மூலமாகச் செய்திகளைப் பரிமாற்றிக் கொள்கின்றன.


தாய் யானை தன் குட்டியைக் கொஞ்சுவது அற்புதமான காட்சியாக இருக்கும். உறவினர்களையும், நண்பர்களையும் சந்திக்கும் போது தும்பிக்கைகளைக் கோர்த்துக் கொண்டு குரல் எழுப்புகின்றன.நோயுற்ற யானைகளுக்கு சக யானைகள் உணவையும், நீரையும் எடுத்து வந்து ஊட்டும். நோயுற்ற யானைகளைத் தடவிக்கொடுத்து ஆறுதல் படுத்தும்.யானைகள் ஆதிகாலத்திலிருந்தே மனிதர்களுக்கு சேவகம் செய்து வருகின்றன.

elephants_Peter Knights Elephant-and-Black-Lab-01-685x441 elephant-painting-itself1Three cheers! Indian Elephants scenting Corbett National Park, India.



காரில் தப்பிச் செல்லும் குற்றவாளிகளை மிக எளிதாக மடக்கிப் பிடிப்பதற்கான ஜிபிஎஸ் தோட்டாவை அமெரிக்காவே சேர்ந்த ஸ்டார் சேஸ் எனும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. காரில் தப்பும் குற்றவாளிகளை போலீசார் துரத்திப் பிடிப்பது மிக சவாலான விஷயமாக இருக்கிறது. போலீசாரை கண்டதும் தாறுமாறாக காரை ஓட்டும் குற்றவாளிகளால் அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதனை தவிர்க்கும் வகையில் குற்றவாளி தப்பிச் செல்லும் காரை துல்லியமாக கண்காணிக்கும் விதத்தில் இந்த புதிய ஜிபிஎஸ் தோட்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


24-1387869149-starchase-04-new

சிறிய ஜிபிஎஸ் கருவியை உள்ளடக்கிய குண்டுதான் இதில் பயன்படுத்தப்படுகிறது. இதனை குற்றவாளி தப்பிச் செல்லும் காரில் போலீசார் துப்பாக்கி மூலம் செலுத்தி ஒட்டிவிட்டால் போதும். ஜிபிஎஸ் தோட்டா ஒட்டப்பட்ட கார் எங்கு, எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை காவல்துறையினரின் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணித்து அந்த காரை அருகிலிருக்கும் ரோந்து போலீசார் உதவியுடன் எளிதாக மடக்கிப் பிடித்து விடமுடியும்.

உயிரிழப்பை தவிர்க்கலாம் காரை துரத்திச் செல்லும்போது பிற வாகனங்களில் செல்வோருக்கும், பாதசாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. மேலும், துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முயன்றாலும் அப்பாவிகளின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதை இந்த புதிய கருவி மூலம் தவிர்க்கலாம். குற்றவாளியின் காரில் ஒட்டப்பட்ட குண்டை எளிதாக அகற்றிவிடவும் முடியும். எனவே, அடுத்த முறையும் அதே குண்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.


தற்போது அமெரிக்க போலீசார் இந்த புதிய ஜிபிஎஸ் தோட்டாவை கார்களில் பொருத்தி சோதனை செய்து வருகின்றனர். தோட்டாவை செலுத்துவதற்கான துப்பாக்கி, கட்டுப்பாட்டு அமைப்புக்கு சேர்த்து ரூ.3 லட்சம் செலவாகும். அதில், ஒரு தோட்டாவின் விலை ரூ.30,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் நாம்ம இலங்கையிலை கொஞ்சம் கஸ்டம்தான்...

Tuesday, December 24, 2013

சூரிய மண்டலத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் நட்சத்திரங்கள் மின்னுவதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.


49cff41d-ee23-489f-8f55-2ee35c1de17e_S_secvpf


இந்த நிலையில் தற்போது சூரிய மண்டலத்துக்கு வெளியே சந்திரன் இருப்பதை இண்டியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக் கழக விஞ்ஞானி டேவிட் பென்னட் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.சக்தி வாய்ந்த டெலஸ் கோப்புகள் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இது பூமியில் உள்ள சந்திரனை விட 70 மடங்கு அதிக வெளிச்சத்துடன் பிரகாசிக்கிறது.


இது வியாழன் கிரகத்தை விட 4 மடங்கு பெரியதாகவும், பூமியை விட அரை மடங்கு அளவும், நமது சந்திரனை விட பல மடங்கு பெரியதாகவும் உள்ளது.

இன்று நோக்கியாவை தவிர அனைத்திலும் ஆண்ட்ராய்டு வந்துவிட்டது எனலாம் அந்த அளவுக்கு இன்று ஆண்ட்ராய்டு உலகை தன் வசம் வைத்துள்ளது. மொபைல் வாங்க செல்வோரின் முதல் தேர்வு அது ஆண்ட்ராய்டு மொபைல் தான் அது என்ன எந்த கம்பெனி மொபைலாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ஆண்ட்ராய்டு மொபைல் வேண்டும் என்று தான் மக்கள் கூறுகின்றனர்.24-24-sonyrollsoutandroid4-3jellybeanupdatetoxperiazzlzrandxperiatabletz


அந்த வகையில் சோனியின் Xperia Z, ZL, ZR மற்றும் Xperia Tablet Z ஆகிய மொபைல்களை நீங்கள் வைத்துள்ளீர்களா இதோ உங்களுக்கான ஆண்டராய்டு அப்டேட்டை சோனி தற்போது உங்களுக்கு வழங்குகிறது.

இந்த மொபைல்களில் எந்த வெர்ஷன் நீங்கள் வைத்திருந்தாலும் தற்போது நீங்கள் ஜெல்லி பீன் 4.3 க்கு நீங்கள் மாறிக் கொள்ளலாம் என்று இன்று அறிவித்துள்ளது சோனி. மேலும், இதை இன்றிலிருந்தே நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது சோனி உங்ககிட்ட சோனி மொபைல் இருக்கா அப்ப உடனே அப்டேட் பண்ணுங்க ஆண்ட்ராய்டின் புதிய வெர்ஷனை.


Posted by V4Tamil .com on 4:49 AM in ,    No comments »

இன்றுமொபைல் உலகில் ஆப்பிளை காப்பி அடித்தாலும் தொடர்ந்து வெற்றிகள் பல குவித்து வரும் சாம்சங் இன்று புதிதாக ஒரு ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. அதுதான் சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2 ஆகும் ஏற்கனவே வெளியான கேலக்ஸி கிராண்ட் விற்பனையில் சக்கைபோடு போட்டது.


23-1387801820-23-1387790178-samsunggalaxygrand2launcheventphoto16


நேற்று வெளியிட்டுள்ள இந்த மொபைலில் ஆண்ராய்டு 4.3 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸிஸ் இயங்கக்கூடியதாகும் மேலும் இது 5.2 இன்ச் நீளம் கொண்டது இந்த மொபைல். பிராஸஸரை பொறுத்த வரை இதில் 1.2GHz quad-core processor பொறுத்தப்பட்டுள்ளது இது மற்ற பிராஸஸர்கலை விட மிகவும் வேகமாக இயங்கக்கூடியதாகும். மேலும் 8MPக்கு கேமராவும் 1.9MP க்கு பிரன்ட் கேமராவும் இதில் இருக்கிறது அதனால் இதன் கிளாரிட்டியும் ஓரளவுக்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.


இந்த மொபைல் 8GB க்கு இன்டர்நெல் மெமரியுடன் சேர்ந்தே வருகிறது இதன் இன்னொரு ஸ்பெஷல் இது டூயல் சிம் மொபைல் என்பதுதான். மேலும் இதில் 1.5GB க்கு ரேமும் இதில் உள்ளது மற்றும் Wi-Fi, Bluetooth, GPS/ AGPS என அனைத்தும் இதில் உள்ளது, இதன் பேட்டரி திறன் 2600mAh தான் இது சற்று குறைவான பேட்டரி திறன் தான் ஆனால் தற்போது வெளிவரும் பெருவாரியான மொபைல்களில் 2000mAh பேட்டரி தான் உள்ளது. இந்த மொபைலின் எடை 163 கிராமாகும், இதன் விலை ரூ.21,500 என சாம்சங் தீர்மானித்துள்ளது.


Posted by V4Tamil .com on 4:19 AM in ,    No comments »

உலகநாடுகளின் கூட்டுமுயற்சியால் 100 பில்லியன் டாலர் மதிப்பில் பூமியிலிருந்து 250 மைல் தொலைவில் சர்வதேச விண்வெளிமையம் நிறுவப்பட்டுள்ளது. பூமியைப் பற்றிய பல்வேறு அரிய தகவல்களைப் பெற இந்த நிலையம் உதவிகரமாகச் செயல்பட்டு வருகின்றது.


3c3b206a-14a9-4d30-8484-a71c4b51d7f5_S_secvpf

கடந்த 11 ஆம் தேதி இந்த விண்வெளிநிலையத்தில் உள்ள குளிர்ச்சியூட்டும் குழாய் ஒன்றில் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கணினித் தொழில் நுட்பமுறைகளைப் பயன்படுத்தி அங்கு வெளியேறும் அம்மோனியா வாயுவினை கட்டுப்படுத்த நாசா விஞ்ஞானிகள் முயன்றனர். இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. சூரியக்கதிர்களால் பாதிப்பு எதுவும் ஏற்படுவதற்குமுன் இந்தக் கோளாறை சரிசெய்யவேண்டி விண்வெளிவீரர்கள் விண்ணில் நடந்துசென்று அங்கு மற்றொரு அறையில் வைக்கப்பட்டிருக்கும் மூன்று உபரி குழாய்களிலிருந்து ஒன்றை இதில் பொறுத்தலாம் என்று நாசா முடிவு செய்தது.

இதன்படி சனிக்கிழமை அன்று ரிக் மஸ்ட்ராச்சியோ, மைக் ஹாப்கின்ஸ் ஆகிய இரண்டு வீரர்களும் விண்ணில் நடந்துசென்று செயலிழந்த குழாயினை நீக்கினர். இன்று மீண்டும் அவர்கள் விண்வெளியில் சென்று புதிய குழாயினைப் பொருத்தும் பணியில் ஈடுபடுவர் என்று விண்வெளிநிலைய நிர்வாக இயக்குனரான ஜட் ஃபிரிலிங் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இன்றைய முயற்சி வெற்றிகரமாக நடைபெறுமேயானால் அவர்கள் மூன்றாவது முறையாக விண்ணில் நடப்பதற்கு தேவையிருக்காது என்று நாசா கருதுகின்றது.  இன்று நடைபெறவிருக்கும் பணியில் எங்களது முக்கிய நோக்கம் நிறைவேறும் என்பது தெளிவாக உள்ளதாக ஃபிரிலிங் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Monday, December 23, 2013

எந்நேரமும் பனிப்பாளங்களாக காணப்படும் கிரீன்லாந்து பகுதிகளின் அடிப்பரப்பில் அயர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் காணப்படுவது குறித்து விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். காலநிலை மாற்றங்களுக்கான பெரிய புதிர் இதன்மூலம் கண்டுபிடிக்கப்படலாம் என்று அவர்கள் நேற்று தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


greenland


கடந்த 2011 ஆம் ஆண்டில் வருடாந்திரப் பனிப்பொழிவைக் கணக்கிடும் விதமாக விஞ்ஞானிகள் கிரீன்லாந்தில் தென்பகுதியில் ஆய்வு நடத்தினர். கடினமான பனிப்பாளத்தில் 10 மீட்டர் ஆழம் வரை துளைத்ததும் திரவநிலையில் நீர்ப்பரப்பு காணப்பட்டதும் அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அங்கிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் மற்றொரு இடத்தில் 25 மீட்டர் துளைத்தபோதும் அங்கும் இதேபோல் நீர்ப்பரப்பு காணப்பட்டது.


இதனைத் தொடர்ந்து  கிரீன்லாந்து நிலப்பரப்பின் அடிப்பகுதி முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது 27,000 சதுர மைல்கள் பரப்பளவிற்கு ஐந்திலிருந்து ஐம்பது மீட்டர் ஆழம் வரை நீர் நிரம்பியுள்ளது கண்டறியப்பட்டது.முந்தைய கோடைக்காலத்தில் உருகிய பனிக்கட்டிகளே இதுபோல் நீர்ப் பரப்பாக மாறியிருக்கக்கூடும் என்று அறிவியல் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.


பனிப்பாளங்களுக்கு அடியில் காணப்படும் பாறைகளின் இடுக்குகளிலும் இதுபோல் தண்ணீர் உறையாமல் சேமிக்கப்பட்டிருந்தது. கிரீன்லாந்தில் காணப்படும் கடுமையான உறைபனிக் காலத்திலும் இந்த நீர்ப்பரப்பு உறையாமல் திரவ நிலையிலேயே காணப்படுவது ஆச்சரியமான விஷயமாகும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழுவின் தலைவரான ரிக் ஃபோஸ்டர் தெரிவிக்கின்றார். இவர் உடா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகின்றார்.


அதிக அளவில் பூமியின் மேற்பரப்பில் பனிப்பொழிவு காணப்பட்டபோதிலும் கோடைக்காலத்தில் பூமியின் அடியிலிருக்கும் நீர் உறையாமல் பாதுகாக்கப்படுவதால் அங்கு தொடர்ந்து நீர்ப்பரப்பு இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மனிதனின் உலக வெப்பமயமாதல் விதிமுறைக்கு உட்படாத இயற்கை சேமிப்பான இந்த நீர்ப்பரப்பு காலநிலை மாற்றங்களுக்கான விடையைத் தெரிவிக்கக்கூடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Wednesday, December 18, 2013

இந்த பூமி உட்பட சூரியன், சந்திரன்  என்று எல்லா கிரகங்களையும் உள்ளடக்கிய பிரபஞ்சத்தின் அழிவு, ஏதோ ஒரு கிரகத்தில் ஆரம்பமாகி விட்டது. இந்த அழிவின் இறுதியில் பிரபஞ்சம், இப்போதுள்ள அளவை விட, சிறியதாக, ஆனால், பொசுக்கும் தீப்பந்தாக உருமாறி விடும். தெற்கு டென்மார்க் பல்கலைக்கழக இயற்பியல் விஞ்ஞானிகள் இப்படி ஒரு புது பீதியை கிளப்பியுள்ளனர்.


Tamil-Daily-News_47626459599


அச்சப்படுத்தும் அந்த ஆய்வு முடிவுகள்: உலகம் உட்பட இந்த பிரபஞ்சம் அழியப்போகிறது என்று முன்னதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், நாங்கள் கண்டுபிடித்த ஆய்வு முடிவுகளின் படி, பிரபஞ்சம் எப்படி அழியப்போகிறது.அதன் பின் அதன் நிலை என்ன என்று தெரியவந்துள்ளது. பல கிரகங்களும் ஒன்றோடு ஒன்று  மோதி நொறுங்கி, உருத்தெரியாமல் ஆகி விடும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் என்று கிரகங்களும், நட்சத்திர கூட்டங்களும் கூட  எல்லாம் ஒன்று சேர் ந்து விடும்.  அதுபோல, இந்த பூமியில் மண், கற்கள் என்று கனிமங்கள் முதல் எல்லாம் உருத்தெரியாமல் ஆகி விடும். பூமியே வேறு உருவத்துக்கு போய்விடும். மொத்தத்தில் எல்லா சக்திகளும், தன்மைகளும் மாறி ஒரு முழு தீப்பந்து போல ஒரே கிரகமாக மாறி விடும் இந்த பிரபஞ்சம்.

இப்படி உருமாறுவதால் அதன் வெப்பசக்தி பல கோடி மடங்கு அதிகரிக்கும். அப்படி ஆகும் போது, இந்த பிரபஞ்சமே ஒரு ராட்சத தீப்பந்து போலாகி விடும். மிகவும் கோரமான இந்த உருமாற்றங்கள் தான்  பிரபஞ்சத்தின் அடுத்த கட்டம் என்று மதிப்பிடப்படுகிறது. அது எப்படியிருக்கும். பூமி போலவே வேறு கிரகம் இயங்கும். அங்கு மனிதர்கள் போல உயிரினங்கள் உருவாகும்.


இந்த பிரபஞ்சம் சிறு துகள் பல கோடி அணுத்துகளாக வெடித்து சிதறி அணுவை பிளந்து அணு உருவானது போல உருவானது தான். இப்படி சொன்ன  ஹிக்ஸ் ஆய்வு போல,  துகள்கள் எல்லாம் வெளிப்பட ஆரம்பிக்கும். பிரபஞ்சம் அழிவது, எங்கே, அது பூமியாகவும் இருக்கலாம், வேறு கிரகமாகவும் இருக்கலாம், அங்கு அழிவு ஆரம்பமாகி  விட்டது. ஒரு நீர்க்குமிழி போல  ஆரம்பமாகி விட்டது என்பதே உண்மை என ஆய்வில் தெரியவந்துள்ளது.  அது சரி, எப்போது பிரபஞ்சம் முழுமையாக அழிந்து தீப்பந்தாகும் என்று தெரியுமா? 100 கோடி ஆண்டுகளுக்கு பின். அப்பாடா, நாம் கவலைப்பட வேண்டாம் தானே.

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search