பிரபலங்களின் பட்டியலில் ரஜினி, அஜித்தின் பெயர்கள் ஏன் இல்லை?..இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் 100 பிரபலங்கள் பட்டியலில் ரஜினிகாந்த், அஜித்குமார் பெயர் விடுபட்டது ஏன் என்பதற்கு பதில் கிடைத்துள்ளது.உலக அளவில் பணக்காரர்கள், பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டில் இந்தியாவில், வருமானம் மற்றும் புகழ் அடிப்படையில் 100 பிரபலங்களின் பட்டியலை அது வெளியிட்டுள்ளது.
அதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 16ஆவது இடமும், சூர்யா 33ஆவது இடமும், கமல் 47ஆவது இடமும், விஜய் 49ஆவது இடமும் பிடித்திருந்தனர்.முதல் 5 இடங்களில் பொலிவுட் நடிகர் ஷாருக்கான், எம்.எஸ்.டோனி, சல்மான்கான், சச்சின் டெண்டுல்கர், அமிதாப்பச்சன் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினி, அஜித் ஆகியோர் பெயர் இடம் பெறவில்லை. இது பற்றி விசாரித்தபோது, பொழுதுபோக்கு துறையில் கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் முதலாம் திகதி முதல் 2013 செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரையிலான காலகட்டத்துக்கான வருமானத்தின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த காலகட்டத்தில் ரஜினிக்கு படம் எதுவும் வெளியாகவில்லை. அஜித்தின் ஆரம்பம் படம் இந்த ஆண்டு தீபாவளியில்தான் வெளியானது. எனவேதான் இவர்கள் பெயர் இப்பட்டியலில் இடம் பெறவில்லையாம்.அதே சமயம் சூர்யா நடித்த சிங்கம் 2, கமலின் விஸ்வரூபம், விஜய் நடிப்பில் துப்பாக்கி, தலைவா ஆகியவை போர்ப்ஸ் ஆய்வு செய்த காலகட்டத்துக்குள் வெளியான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment