பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
டுபாயில் நேற்று பகல், இரவு ஆட்டமாக இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. பாகிஸ்தான் சார்பில் மிஸ்பா உல்ஹக் 51 ஓட்டங்களையும், முஹமட் ஹபீஸ் 41 ஓட்டங்களையும், அஸ்வர் அலி ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
முடிவில் 49.3 ஓவர்களிலேயே அந்த அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய லசித் மலிங்க 4 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இதன்படி 233 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை, 49.4 ஓவர்களிலேயே எட்டு விக்கெட்டுக்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை விளாசி இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்த தினேஷ் சந்திமால் தெரிவானார். மேலும் தொடரின் சிறப்பாட்டக்காரராக பாகிஸ்தான் அணியின் முஹமட் ஹாபீஸ் தெரிவுசெய்யப்பட்டார். இதன்படி ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
0 comments:
Post a Comment