வருகிற 2014 புத்தாண்டு தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் வாடிக்கையாளர்களை கவர இப்போதே களைகட்டத் துவங்கி உள்ளன.
அங்கு மது விருந்துகளுக்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக டிக்கெட்டுகள் அச்சிட்டு விற்கப்படுகின்றன. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும் மதுவிருந்து கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அன்றைய தினம் இதுவரை மது அருந்தி பழக்கமில்லாத இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை குடிப்பழக்கத்தில் தள்ளிவிட நட்பு வட்டாரங்கள் தயாராகி வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில் நடிகர், நடிகைகளை வைத்து மது இல்லாத புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 31–ந்தேதி இரவு கிண்டியில் உள்ள கேம்ப கோலா மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நடிகர்கள் ஆர்யா, சிம்பு, பரத், பிரசன்னா, சந்தானம், யுவா
நடிகைகள் சினேகா, லட்சுமிராய், அனுயா, ஷாலி, உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த மது இல்லாத புத்தாண்டு நிகழ்ச்சியில் குடும்பத்தினர் குழந்தைகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் விளையாட்டு, பாட்டு, இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஐந்து நட்சத்திர ஓட்டல் உணவு வகைகளும் பரிமாறுகின்றனர். வெண்காம், ஷான், மற்றும் தினி தொண்டு அமைப்பினர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த மது இல்லாத புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நடிகர் பரத் தூதுவராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதில் வசூலாகும் தொகை ஏகம் பவுண்டேஷன் அறக்கட்டளைக்கு வழங்கப்படுகிறது.
0 comments:
Post a Comment