தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் காலிஸ் நேற்று முன்தினம் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற இந்திய சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'நம்ப முடியாத அளவுக்கு விளையாடி டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துள்ள காலிசுக்கு வாழ்த்துகள். கிரிக்கெட் விளையாட்டை சரியான உத்வேகத்துடன் விளையாடி உள்ளீர்கள்.
உங்களுக்கு எதிராக நான் விளையாடிய நாட்கள் மகிழ்ச்சிகரமானது. காலிஸ் நீங்கள் உண்மையான ஒரு சாம்பியன். கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின்னரான வாழ்க்கை அப்படி ஒன்றும் மோசமானது அல்ல' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment