Tuesday, December 24, 2013

 




தனது மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன் மிகச்சிறந்த தாயாக தனது மகள் ஆராத்யாவை வளர்த்து வருவதாக நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும், ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் - ஜெயாபச்சன் தம்பதியினரின் மகனும், நடிகருமனான அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது 2 வயதில் ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அபிஷேக் பச்சன் தனது மனைவி மிகச் சிறந்த தாயாக தனது கடமைகளை நிறைவேற்றி வருவதாக மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

மேலும், அவர் முன்னாள் உலக அழகியும், தனது மனைவியுமான ஐஸ்வர்யா ராய் குறித்து கூறியிருப்பதாவது,

'ஐஸ்வர்யாவின் தொழில் பக்தி மற்றும் அர்ப்பணிப்பு குறித்து கேள்விக்கு இடமில்லை. 2 வயது மகள் ஆராத்யாவை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்டு அன்புடன் வளர்த்துவரும் ஐஸ்வர்யா, ஒரு மிகச் சிறந்த தாயாக விளங்குகிறார். ஒரு இணை நடிகராக, அவருடன் பணியாற்றுவதை மிகவும் விரும்புகிறேன். இது எனக்கு மிகுந்த சந்தோஷமே. திரை உலகத்திலிருந்து மகள் ஆராத்யாவை பாதுகாக்கவே நானும், ஐஸ்வர்யாவும் விரும்புகிறோம். குழந்தையின் பெற்றோராக மகள் ஆராத்யா, ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவே நாங்கள் இருவரும் விரும்புகிறோம். ஊடகங்கள் மற்றும் திரை பத்திரிக்கைகளில் இருந்து நான் பாதுகாக்கப்பட்டேன்.

எனக்கு 18 வயது இருக்கும்போது, முதலாவதாக திரைப்பத்திரிக்கை ஒன்றில் வந்தேன். எனவே நட்சத்திரங்களின் குழந்தைகளை புகைப்படம் எடுப்பதிலிருந்து ஊடகங்கள் கட்டுப்பாடு காட்ட வேண்டிக்கொள்கிறேன்' என என்று அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.




0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search