பைக் வீராங்கனையான அலிஷா ‘இரும்புக்குதிரை’ படத்தில் நடிக்கிறார்.
இந்தியாவின் ஒரே பைக் ரேஸ் வீராங்கனை என்ற புகழ் பெற்றவர் அலிஷா அப்துல்லா. சென்னையை சேர்ந்த இவர் பைக் வீராங்கனை மட்டுமல்ல கார் ரேஸ் வீராங்கனையும் ஆவார். இவரது தந்தை அப்துல்லா 7 முறை இந்திய அளவில் பைக் ரேஸில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.
ஆனால் இப்போது அலிஷாவையும் சினிமா உலகம் விட்டு வைக்கவில்லை. அதர்வா, பிரியா ஆனந்த் நடிக்கும் ‘இரும்புக்குதிரை’ படத்தில் அலிஷாவும் நடிக்கிறார். படத்தில் அவர் பைக் ரேஸ் வீராங்கனையாக வருகிறார். யுவராஜ் போஸ் இயக்கிவரும் இந்தப்படத்தில் பைக் சேசிங் காட்சிகளும் படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்தக்காட்சிகளில் ஒரு நிஜ பைக்கர் இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்பதால் அலிஷாவுக்கு அடித்திருக்கிறது இந்த லக்கி சான்ஸ்.
இந்தியாவின் மிக வேகமான பெண் என்ற பெயர் பெற்ற இவர், அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். அலிஷா, ஏற்கெனவே அஜீத்துடன் நடிக்க விரும்புவதாக கூறியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இப்போது வாய்ப்பு தேடிவந்திருப்பது அதர்வாவுடன் நடிக்கத்தான்.
0 comments:
Post a Comment