இயக்குனர் வெற்றிமாறன் படங்களுக்கும், தனுஷ் படங்களுக்கும் ஆஸ்த்தான ஒளிப்பதிவாளராக இருந்து வருபவர் வேல்ராஜ். இவர் இயக்குனராக வேண்டும் என்கிற நீண்ட நாளைய கனவு, தனுஷ் மூலமே நிறைவேறியிருக்கிறது.
வேல்ராஜ் தனுஷிடம் சொன்ன ஒரு கதை பிடித்துப் போக, தனது சொந்த நிறுவனமான தனுஷ் வோண்டர் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிக்க முன் வந்திருக்கிறார். படத்துக்கு வேலையில்லா பட்டதாரி என பெயரிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் முதன் முறையாக தனுஷுடன் ஜோடி சேருபவர் நடிகை அமலாபால். பொல்லாதவன் படத்தையடுத்து இந்தப் படத்துக்காகவும் சிக்ஸ்பேக் வைத்து நடிக்கவுள்ளார்.
அத்தோடு, வேலையில்லா பட்டதாரி... தொட்டுப் பாத்தா ஷாக்கடிக்கும் வேற மாதிரி என்ற ஒரு பாடலையும் எழுதி அசத்தியிருக்கிறார் தனுஷ்.
0 comments:
Post a Comment