இன்றுமொபைல் உலகில் ஆப்பிளை காப்பி அடித்தாலும் தொடர்ந்து வெற்றிகள் பல குவித்து வரும் சாம்சங் இன்று புதிதாக ஒரு ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. அதுதான் சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2 ஆகும் ஏற்கனவே வெளியான கேலக்ஸி கிராண்ட் விற்பனையில் சக்கைபோடு போட்டது.
நேற்று வெளியிட்டுள்ள இந்த மொபைலில் ஆண்ராய்டு 4.3 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸிஸ் இயங்கக்கூடியதாகும் மேலும் இது 5.2 இன்ச் நீளம் கொண்டது இந்த மொபைல். பிராஸஸரை பொறுத்த வரை இதில் 1.2GHz quad-core processor பொறுத்தப்பட்டுள்ளது இது மற்ற பிராஸஸர்கலை விட மிகவும் வேகமாக இயங்கக்கூடியதாகும். மேலும் 8MPக்கு கேமராவும் 1.9MP க்கு பிரன்ட் கேமராவும் இதில் இருக்கிறது அதனால் இதன் கிளாரிட்டியும் ஓரளவுக்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.
இந்த மொபைல் 8GB க்கு இன்டர்நெல் மெமரியுடன் சேர்ந்தே வருகிறது இதன் இன்னொரு ஸ்பெஷல் இது டூயல் சிம் மொபைல் என்பதுதான். மேலும் இதில் 1.5GB க்கு ரேமும் இதில் உள்ளது மற்றும் Wi-Fi, Bluetooth, GPS/ AGPS என அனைத்தும் இதில் உள்ளது, இதன் பேட்டரி திறன் 2600mAh தான் இது சற்று குறைவான பேட்டரி திறன் தான் ஆனால் தற்போது வெளிவரும் பெருவாரியான மொபைல்களில் 2000mAh பேட்டரி தான் உள்ளது. இந்த மொபைலின் எடை 163 கிராமாகும், இதன் விலை ரூ.21,500 என சாம்சங் தீர்மானித்துள்ளது.
0 comments:
Post a Comment