Saturday, December 14, 2013

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நேற்றி இரவு துபாயில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.


1042654514Untitled-1

இதன்படி முதலில் துடுப்புடன் களமிறங்கிய இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டில்ஷான் (48) மற்றும் குசல் பெரேரா (84) ஆகியேர் சிறந்த தொடக்கத்தை பெற்றுக் கொடுத்தனர். மேலும் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களை விளாச, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களைக் குவித்தது.

தொடர்ந்து 212 என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 187 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன்மூலம் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றியைத் தழுவியது. போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை குசல் பெரேராவும் தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதை ஷகிட் அப்ரிடியும் வென்றனர்.

இதன்படி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடர் 1-1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.

Posted by V4Tamil .com on 1:31 AM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search