ரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கதான் அதிக வாய்ப்பு,கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த படம் ராணா. அதில் இந்தி நடிகை தீபிகா படுகோனேதான் நாயகியாக நடிக்க கமிட்டாகியிருந்தார். ஆனால், படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்ற சில தினங்களிலேயே ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று மறுபிறவி எடுத்து வந்தார்.
அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உடலுக்கு ஓய்வு தேவை. அதனால் ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்கக்கூடாது என்றெல்லாம் கண்டிசன் போட்டதால், அதையடுத்து மகள் செளந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தார். இரண்டு ஆண்டுகளாக வேலைகள் நடந்த அப்படம் இப்போது திரைக்கு வர தயாராகி விட்டது.
இந்த நிலையில், வழக்கம்போல் ரஜினியின் அடுத்த படம் குறித்த செய்திகள் கோலிவுட்டில் புகையத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு ரஜினியின் புதிய படத்தை ஷங்கர் அல்லது கே.வி.ஆனந்த் இயக்கலாம் என்று சொன்னவர்கள். இப்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கதான் அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
ஏற்கனவே ரஜினியை வைத்து முத்து, படையப்பா என ஹிட் படங்களை கொடுத்தவர் என்பதோடு, இப்போது ரஜினியை அடிக்கடி சென்று சந்தித்து வரும் நபர் அவர் மட்டுமே. அதோடு தற்போது அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. அதனால், கோச்சடையான் ரிலீசுக்குப்பிறகு ரஜினி நடிக்கும் படத்தை அவர் இயக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
மேலும், புதிய படம் பற்றி அவர்கள் முடிவெடுத்து விட்டபோதும், கோச்சடையான் வெளியாகயிருக்கும் இந்த நேரத்தில் புதிய படம் பற்றி செய்தி வெளியிட்டால், கோச்சடையானுக்கான எதிர்பார்ப்பு குறைந்து விடும் என்பதற்காகவே தற்போதைக்கு அமைதி காத்து வருவதாகவும் செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது.
0 comments:
Post a Comment