கடந்த, 1990களில், தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர், கவுதமி. கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, மிக பிசியாக இருந்தவர். நகரத்தை பின்னணியாக உடைய கதையாக இருந்தாலும் சரி; கிராமத்து கதையாக இருந்தாலும் சரி; கூப்பிடுங்கள் கவுதமியை, என, இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கூறும் அளவுக்கு, வெளுத்து வாங்கியவர். கடந்த சில ஆண்டுகளாக, நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த அவர், தற்போது, மீண்டும் நடிக்க தயாராகி வருகிறார்.
சமீபத்தில், திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு விழாவில், அவர் பேசுகையில், என் வாழ்க்கையில், கமல்ஹாசனை மறக்க முடியாது. துாண் போன்றவர். விஸ்வரூபம் படத்துக்கு, உடை அலங்காரம் செய்யும்படி, அவர் கேட்டதும், உடனே ஒப்புக் கொண்டேன். இப்போது, மீண்டும் நடிப்பது குறித்து, யோசித்து வருகிறேன். இன்னும் சில மாதங்களில், அதுபற்றி முடிவெடுப்பேன் என்றார்.
0 comments:
Post a Comment