Tuesday, December 31, 2013

ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கின் முன்னணி நடிகருமான பவன் கல்யாணம் ஆந்திரா மீடியாக்களுக்கு செய்தி சுரங்கம். அவ்வப்போது பரபரப்பு செய்திகளை தருவார். இந்த முறை அவர் தந்திருப்பது அவரது மூன்றாவது திருமணம் பற்றியது.


Pavan-kalyan2


ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு மனைவிகளை பிரிந்த பவன் இப்போது அன்னா லெல்னோவா என்ற ஆஸ்திரேலிய மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். வெறும் வதந்தியாக இருந்த இந்த செய்தி அவரது திருமண ஒப்பந்தம் வெளியானதை தொடர்ந்து உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது.

1977ம் ஆண்டு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நந்தினியை காதலித்து இருவீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடமே அவருடன் வாழ்ந்த பவன், அவரை விவாகரத்து செய்து விட்டு தன்னுடன் சில படங்களில் நடித்த ரேணு தேசாயை திருமணம் செய்து கொண்டார். ரேணுவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்த பிறகு அவரையும் பிரிந்து விட்டார்.


தற்போது ஆஸ்திரேலிய அழகியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து ஒரு குழந்தையும் இருப்பதாக தங்களது திருமண ஒப்பந்தத்தில் கூறியிருக்கிறார்கள். யார் இந்த ஆஸ்திரேலிய அழகி அன்னா. அவருக்கும் பவனுக்கும் எப்படி அறிமுகம் ஏற்பட்டது. எங்கு குடும்பம் நடத்தினார்கள் என்று தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஆந்திர ரசிகர்கள்.

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search