மும்பை ஆரே பகுதியை சேர்ந்தவர் பிரசான்த் பிராதாப் சிங்(வயது 36). தொழில் அதிபர். இவர் ஆரே போலீஸ் நிலையத்தில் இந்தி நடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள வீனா மாலிக் வந்திருந்தார். அப்போது நான் அவரை சந்தித்தேன். அப்போது அவருக்கு பல்வேறு உதவிகளை செய்தேன். இதில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்.
பின்னர் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. தொடர்ந்து நாங்கள் ஆரே பகுதியில் ஆடம்பர குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தோம். மேலும் வீனாவிற்காக பல கோடி ரூபாய் செலவு செய்தேன்.
இந்தநிலையில் கடந்த 25-ம் தேதி வீனாவிற்கு துபாய் தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதுபற்றி விசாரிக்க வீனாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர், இனிமேல் என் வாழ்வில் குறுக்கிடக்கூடாது என்றும், தொடர்ந்து ஏதேனும் தொந்தரவு செய்தால் மானபங்கம் அல்லது பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடருவேன் என்று மிரட்டினார். மேலும் என் தாயாருக்கு போன் செய்து அவரையும் மிரட்டினார். இவ்வாறு தொழில் அதிபர் பிரசான்த் பிரதாப் சிங் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீனா மாலிக் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment