Tuesday, December 24, 2013

நடிகர் மோகன்பாபு, பிரமானந்தாவின் பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுக்க ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மோகன்பாபு மற்றும் நகைச்சுவை நடிகர் பிரமானந்தம் ஆகிய இருவருக்கும் 2007 மற்றும் 2009-ம் ஆண்டு முறையே பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு மோகன்பாபு தயாரித்த 'தேனிகைனா ரெடி' என்ற திரைப்படைத்தில் அவரது மகன் விஷ்ணு மஞ்சு, ஹன்சிகா மோத்வானியுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.





நகைச்சுவை படமான இதில் பிரபலமான நடிகர் பிரமானந்தாவும் நடித்து இருந்தார். இந்த படத்தில், பிரமாணர்களை மாமிசம் சாப்பிடுபவர்களாக காட்டி கேவலப்படுத்தியிருப்பதாக அப்போது போராட்டம் நடந்தது. மேலும் பட நன்மதிப்பிற்காக பத்மஸ்ரீ பட்டத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தியதாக பாரதிய ஜனதா தலைவர் இந்திரசேனா ரெட்டி என்பவர் ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.


downloadஇந்த மனுவை நேற்று நீதிபதிகள் கல்யாண் ஜோதி சென்குப்தா மற்றும் சஞ்சய்குமார் விசாரித்தனர். இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், சர்ச்சைக்குரிய இந்த படத்தின் விளம்பரத்திற்காக பத்மஸ்ரீ பட்டத்தை நடிகர் மோகன்பாபுவும், பிரமானந்தாவும் தவறாக பயன்படுத்தியிருக்கின்றனர். இது அந்த பட்டத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே அவர்கள் இருவரும் பத்மஸ்ரீ பட்டத்தை கவுரவமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினர்.
இதுகுறித்த அடுத்த விசாரணை வரும் 30-ம் தேதி நடக்கும் என்றும் நீதிபதிகள் கூறினர்.






 

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search