மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவரும், தேசிய விருது பெற்றவருமான மீரா ஜாஸ்மின், தமிழில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது விஞ்ஞானி, இங்க என்ன சொல்லுது ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் நடித்து வருகிறார்.
துபாயில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் அனில் ஜான் டைட்டஸ் என்பவருக்கும், மீரா ஜாஸ்மினுக்கும் இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம் நந்தவனம் பகுதியைச் சேர்ந்த டைட்டஸ், சுகதகுமாரி தம்பதிகளின் மகனான அனில் ஜான் டைட்டஸ், சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக் படித்துள்ளார்.
மீரா ஜாஸ்மின், அனில் ஜான் டைட்டஸ் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி, திருவனந்தபுரத்தில் இருக்கும் எல்.எம்.எஸ் சர்ச்சில் நடைபெறுகிறது. இதில் மலையாளம் மற்றும் தமிழ்த் திரையுலகினர் கலந்துகொள்கின்றனர். திருமணத்துக்குப் பிறகும் மீரா ஜாஸ்மின் தொடர்ந்து நடிப்பார் என்று, அவரது தரப்பில் ஒருவர் தெரிவித்தார்.ஏற்கனவே மீரா ஜாஸ்மினையும், மாண்டலின் ராஜேசையும் இணைத்து கிசுகிசுக்கள் வெளியானது. இந்நிலையில், துபாய் என்ஜினீயரை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்ய இருப்பதாக கேரளாவில் செய்தி வெளியாகி இருப்பது, மலையாளப் படவுலகினரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
0 comments:
Post a Comment