மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், மலையாள திரையுலகில் முன்னணி நாயகனாக உள்ளார்.தற்போது இவர் மலையாளத்தில் ‘சலாலா மொபைல்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் நஸ்ரியா தான் துல்கருக்கு ஜோடி. மேலும் படத்தில் நஸ்ரியா முதன் முறையாக ‘உம்மச்சி ராக்’ என்ற ஒரு பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார். இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ‘சலாலா மொபைல்ஸ்’ படத்தில் சந்தானம் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்திருக்கிறாராம். இதன்மூலம் அவர் மலையாளத்திலும் அடியெடுத்து வைக்கிறார். இதில் கோயம்புத்தூரைச் சேர்ந்தவராக நடித்திருக்கும் சந்தானம், இதுவரை நடித்திராத வித்தியாசமான கெட்டப்பிலும் நடித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.ஆனால் படம் வரும்வரை இந்த விஷயத்தை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்களாம். படம் வரும் ஜனவரி-23ஆம் தேதி வெளியாகிறது.
0 comments:
Post a Comment