அதை உறுதி செய்யும் வகையில், பினோனியில் நடந்த வலைப் பயிற்சியின்போது இந்திய அணி வேகங்கள் இஷாந்த், முகமது ஷமி, புவனேஷ்வர் ஆகியோர் கோஹ்லிக்கு அதிவேக பவுன்சர்களை வீசினர். அவற்றை லாவகமாக எதிர்கொண்ட அவர், சில பந்துகளை சிக்சருக்கு தூக்கி அசத்தினார். எனினும், தென் ஆப்ரிக்க வேகங்களுக்கு எதிராக இது எடுபடுமா என்பது தெரியவில்லை.
இந்திய ஆடுகளங்களில் அடித்து நொறுக்கிய தவான், ரோகித், விராத் ஆகியோர் தென் ஆப்ரிக்காவுடன் நடந்த ஒருநாள் தொடரில் பெரிதாய் சாதிக்க தவறியது டோனிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ‘ஒருநாள் போட்டிகளில் 3வது வீரராகவும், டெஸ்ட் போட்டிகளில் 5வது வீரராகவும் விளையாடி வரும் கோஹ்லி, சச்சினின் இடத்தை பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. 4வது வீரராக களமிறங்குவதில் அவருக்கு எந்தவித சிரமமும் இருக்காது என நினைக்கிறேன். அதைப் பற்றி அவரும் பெரிதாக கவலைப்படவில்லை. அதிக ரன் குவிக்க வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கும் அவரைப் போன்ற வீரர்கள், பேட்டிங் வரிசையில் முன்கூட்டியே களமிறங்க தயங்கமாட்டார்கள்’ என்று தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரே ஜென்னிங்ஸ் கூறியுள்ளார். பினோனியில் நடைபெற இருந்த 2 நாள் பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இந்திய வீரர்கள் வலைப்பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டி, ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது.
0 comments:
Post a Comment