ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கித் தவித்த ஆம்ஸ்ட்ரோங், தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். முன்னாள் அமெரிக்க சைக்கிளோட்ட வீரரான லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங் ஊக்க மருந்து பயன்படுத்தியதை அண்மையில் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவரின் பதக்கங்கள் பறிக்கப்பட்டன. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் மீது புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
அதாவது கடந்த 1993 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற மாபெரும் பரிசுத் தொகைக்கான சைக்கிள் பந்தயத்தில் வெற்றிபெறுவதை விட்டுக்கொடுக்க ஆம்ஸ்ட்ரோங், தனக்கு பணம் கொடுக்க முன் வந்தார் என இத்தாலியை சேர்ந்த ஓய்வு பெற்ற சைக்கிள் பந்தய வீரர் ராபர்டோ காஜிலி புகார் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி இத்தாலியில் வெளியாகும் பத்திரிகைகளில் வெளிவந்து புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
0 comments:
Post a Comment