விண்வெளியிலிருந்து பூமியை பார்க்க நீங்கள் ஆர்வமாக இருக்கின்றீர்களா? உங்களது ஆர்வத்தை தீர்த்து வைக்க அமெரிக்க நிறுவனமொன்று தயாராகியுள்ளது.
விண்வெளியிலிருந்து புவியின் வடிவத்தினையும் சில நிமிடங்களுக்கு பூச்சிய நிறை நிலையை அனுபவிக்கும் நோக்கில் இச்சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணத்தில் சூப் விருந்தும் நட்சத்திரங்களுடன் ஸெல்பீ படங்களும் எடுக்கக்கூடியதாக இருக்கும்.
இதனை அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைத் தளமாகக்கொண்ட வேர்ல்ட் வீவ் என்டர்பிரைஸஸ் என்ற நிறுவனம் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளவுள்ளது.
புவியின் மேற்பரப்பிலிருந்து 19 மைல் தொலைவுக்கு ஹீலியம் வாயு பலூனில் 8 பேரை அழைத்துச் செல்ல இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக நேற்றுமுன்தினம் அறிவித்துள்ளது. இப்பயணம் தொடர்பில் இம்மாதத்தின் ஆரம்பத்தில் குறித்த நிறுவனம் அறிவித்திருந்தது.
விண்வெளியிலிருந்து எமது கிரகத்தின் ஆச்சரியங்களை ரசிக்கும் இச்சுற்றுலாவிற்கான கட்டணம்தான் தலையைசுற்ற வைக்கிறது. சுமார் எட்டரை மணிநேர பலூன் பயணத்துக்கு 75,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் ஒரு கோடி ரூபா) மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டள்ளது.
இச்சுற்றுலாவுக்கு 40 மில்லியன் கன மீற்றர் ஹீலியம் பலூன் பயன்படுத்தப்படவுள்ளது. அதாவது ஒரு கால்பந்தட்ட மைதானத்தின் அளவினை ஒத்தது. விமானமொன்றுடன் இணைத்து இந்த பலூன் நியூ மெக்ஸிகோ பாலைவனத்திலுள்ள சேர் ரிச்சர்ட் ப்ரன்ஸன்ஸ் ஸ்பேஸ்போர்ட்டிலிருந்து மேலெழும்பவுள்ளது.
இச்சுற்றுலா குறித்து பயணத்தை ஏற்பாடு செய்துள்ள குறித்த நிறுவத்தில் நிறைவேற்று அதிகாரி ஜேன் பொய்ன்டர் கூறுகையில், 'சில மணி நேரங்களுக்கு விண்வெளியிலிருந்து புவினைக் காணும் அனுபவத்தினை மக்களுக்கு கொடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
'இப்பயணத்தில் 6 பயணிகளும் 2 பணியாளர்களும் பயணிக்கவுள்ளனா. புவியின் எல்லையை அடைய ஒன்றரை மணி நேரமாகும். பயணிகள் இரண்டரை மணிநேரம் பூமிக்கு மேல் மிதக்கலாம். பின்னர் 20-40 நிமிடத்தில் தரை இறங்கலாம். இதற்கு பயணிகளுக்கு எதுவிதமான பயிற்சிகளும் தேவையில்லை. பாதுகாப்பானது.' என்கிறார் பொய்ன்டர்.
உயர்தர சொகுசான அனுபவமாக இதனை நினைக்கலாம் என தெரிவித்துள்ளார் பொய்ன்டரின் கணவரும் நாஸாவின் பாதுகாப்பு பொறிமுறை வடிவமைப்பாளராக இருந்த டபெர் மெக்கலம். இந்த தம்பதியினர் செவ்வாயில் மனித வாழ்க்கை குறித்து அரிசோனாவில் ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment