பொலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மனைவி சூசனை விவகாரத்து செய்யப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.பொலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் நடிகர் சஞ்சய் கானின் மகள் சூசன் கானை கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி மணம் முடித்தார்.
அவர்களுக்கு ரிஹான், ரிதான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரித்திக்கின் நடவடிக்கைகள் சூசனுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர் அண்மையில் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
தனது மாமனார் ராகேஷ் ரோஷனின் பிறந்தநாள் விழாவுக்கும் ஏதோ கடமைக்கு வந்துவிட்டார் சூசன். மேலும் வழக்கமாக தனது கணவருடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் அவரை இந்த ஆண்டு பார்க்க முடியவில்லை.இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்பள்ளி வைக்கும் வகையில் ரித்திக் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
எங்களது 17 ஆண்டுகால உறவுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. என்னை விட்டு பிரிய அவர் (சுசன்னே) தீர்மானித்துவிட்டார். இது எனது குடும்பத்தினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நேரத்தில் என்னையும், எனது குடும்பத்தினரையும் தனிமையில் அனுமதிக்குமாறு ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன். என ரித்திக் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment