உலக கோப்பை கபடி போட்டி பஞ்சாப்பில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டி ஜலந்தரில் நேற்று நடந்தது. இதில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதியது.
தொடர்ந்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி இறுதிப்போட்டியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 49-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலககோப்பையை இந்திய பெண்கள் அணி தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.
இதற்காக ஒரு கோடி பரிசும் வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு ரூ.51 லட்சம் பரிசு கிடைத்தது. போட்டியில் சிறந்த ஸ்டாப்பராக இந்தியாவின் அனுராணியும், சிறந்த ரைடராக ராம்பத்தேரியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாருதி ஆல்டோ கார் பரிசாக வழங்கப்பட்டது. 3வது இடத்திற்கான போட்டியில் டென்மார்க் அணி 34-33 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்து அதிர்ச்சி அளித்தது.
ஆண்களுக்கான 3வது இடத்திற்கான போட்டியில் அமெரிக்கா 62-27 புள்ளி கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஆண்கள் பிரிவு இறுதி போட்டி நாளை நடக்கிறது. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகிறது.
0 comments:
Post a Comment