சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரப்படுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தென்னாபிரிக்க, இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியினைத் தொடர்ந்தே இந்தத் தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் தென்னாபிரிக்காவின் ஏபி.டி.வில்லியர்ஸ், ஹசிம் அம்லா இருவரும் முதலிரு இடங்களில் தொடர்ந்தும் காணப்படுகின்றனர். 3ஆவது, 4ஆவது இடங்களுக்கு ஷிவ்நரின் சந்தர்போல், றொஸ் ரெய்லர் இருவரும் முன்னேறியுள்ளனர்.
துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தல்கள்:
1 ஏ.பி.டி.வில்லியர்ஸ்
2 ஹசிம் அம்லா
3 ஷிவ்நரின் சந்தர்போல்
4 றொஸ் ரெய்லர்
5 மைக்கல் கிளார்க்
6 குமார் சங்கக்கார
7 செற்றேஸ்வர் புஜாரா
8 மிஸ்பா உல் ஹக்
9 கிறேம் ஸ்மித்
10 யுனிஸ் கான்
பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் 186 போட்டிகளுக்குப் பின்னர் தென்னாபிரிக்காவின் டேல் ஸ்ரெய்ன் தனது முதலிடத்தை இழந்துள்ளார். 2ஆவது இடத்தில் காணப்பட்ட சகநாட்டு வீரர் வேர்ணன் பிலாந்தர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தல்:
1 வேர்ணன் பிலாந்தர்
2 டேல் ஸ்ரெய்ன்
3 ரங்கன ஹேரத்
4 சயீட் அஜ்மல்
5 றயன் ஹரிஸ்
6 பீற்றர் சிடில்
7 இரவிச்சந்திரன் அஷ்வின்
8 பிரக்ஜான் ஓஜா
9 ஸ்ருவேர்ட் ப்ரோட்
10 ட்ரென்ட் போல்ட்ற்
சகலதுறை வீரர்களுக்கான தரப்படுத்தலில் இரவிச்சந்திரன் அஷ்வின் முதலிடத்தில் காணப்படுகிறார்.
சகலதுறை வீரர்களுக்கான தரப்படுத்தல்:
1 இரவிச்சந்திரன் அஷ்வின்
2 ஷகிப் அல் ஹசன்
3 ஜக்ஸ் கலிஸ்
4 வேர்ணன் பிலாந்தர்
5 ஸ்ருவேர்ட் ப்ரோட்
0 comments:
Post a Comment