இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணிக்கு டெஸ்ட் தொடர் சவாலானது என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் கடந்த காலங்களில் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியது கிடையாது.இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இந்திய அணி விளையாடிய 4 டெஸ்டிலும் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆனது. தற்போது அனுபவம் இல்லாத வீரர்களை கொண்ட இந்திய அணி தென்ஆப்பிரிக்காவின் சவாலை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்திய அணி கேப்டன் டோனி கூறியதாவது
ஒருநாள் தொடருக்கு முன்பு நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் ஒருநாள் தொடரில் சரியாக விளையாடவில்லை. இதில் இருந்து வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள்.டெஸ்ட் தொடருக்காக வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
ஜாகீர்கானின் அனுபவம் முக்கிய பங்களிக்காக இருக்கும் எனது நம்புகிறேன். அஸ்வினும் அதற்கு இணையான நிலையில் உள்ளார். இந்த தொடரில் பந்துவீச்சு சிறப்பாக அமைவதே மிகவும் முக்கியம் நேர்த்தியுடன், ஸ்டம்பை நோக்கி வீசுவதுதான் முக்கியமானதாகும்.மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். ஒருநாள் போட்டியில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டு டெஸ்ட் தொடரில் ஆடுவார்கள்.
0 comments:
Post a Comment