ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் ஆஷஸ் தொடரை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.பேர்த்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 150 ஓட்டங்களால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி 3 க்கு 0 என்ற ஆட்டக்கணக்கில் தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸ்சில் 385 ஓட்டங்களையும் இங்கிலாந்து அணி 251 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டன.இதனைத் தொடர்ந்து தனது 2 ஆம் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 369 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.504 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி தனது 2 ஆம் இன்னிங்ஸ்சில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 353 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சகல துறைவீரர் பென் ஸ்டொக்ஸ் 120 ஒட்டங்களைப் பெற்றதுடன், இயன் பெல் 60 ஓட்டங்களைப் குவித்தார்.மிச்சேல் ஜோன்சன் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.போட்டியின் சிறப்பாட்டகாரராக ஸ் ரீவன் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment