யாருக்கும் வாய்ப்பளிக்க விருப்பமில்லாதவர்கள் பயன்படுத்தும் 49-0 தான் படத்தின் பெயர். அரசியல் கதை. ஆனால் காமெடியாக சொல்லவிருக்கிறோம் என்ரார் படத்தை இயக்கும் ஆரோக்கியதாஸ். அரசியலே காமெடியாகி பல வருஷமாச்சே சார்...?
இந்தப் படத்தின் ஹைலைட் லோலைட் மற்றும் மிடில்லைட் எல்லாமே கவுண்டமணி. நக்கலும் நய்யாண்டியுமான கவுண்டரைப் பார்த்து ரொம்ப நாளாச்சு என வருந்தும் அவரது ரசிகர்களுக்காகவே எடுக்கப்படுகிற படம் இது. கவுண்டர் இதில் விவசாயியாக வருகிறார். அரசியலை வாயாலே உழுது களையெடுப்பார்.
இதன் படப்பிடிப்பு தற்போது குன்றத்தூரில் நடந்து வருகிறது. நான் ஸ்டாப்பாக ஜனவரிவரை ஓட்டு ஓட்டென்று ஓட்டயிருக்கிறார்கள். கவுண்டமணி ரீஎன்ட்ரி ஆவதால் சான்டல்வுட் மாதிரியான லைட்வெயிட் காமெடியன்கள் உஷாராக இருப்பது நலம்.
0 comments:
Post a Comment