லிங்குசாமி படத்தில் சூர்யாவுடன் மும்பையைச் சேர்ந்த நடிகை ஒருவர் நடனமாடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிங்கம் 2 வெற்றியைத் தொடர்ந்து சூர்யா, லிங்குசாமி தயாரித்து இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் மும்பையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது அங்கு படத்தின் பாடல் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார்களாம்.
இதற்காக எண்பது லட்ச ரூபய் செலவில், மும்பை மும்பை போரிவாலி பகுதியில் மிகப்பெரிய செட் ஒன்று அமைத்து அதில் பாடல்காட்சியை படமாக்குகிறார்களாம். இந்தப்பாடலில் சூர்யாவுடன் மும்பையைச் சேர்ந்த நடிகை ஒருவர் ஆடுவார் என தெரிகிறது. யுவனின் துள்ளல் இசையில் ரஞ்சித்தின் குரலில் தயாராகியுள்ள இந்தப்பாடலுக்கு ராஜுசுந்தரம் வித்தியாசமான முறையில் நடனம் அமைக்கிறார்.பாடல் காட்சியை எடுத்தப் பிறகும் கூட படப்பிடிப்பு இரண்டு வாரங்களுக்கு மும்பையில் தொடரும் என சொல்லப்படுகிறது. அதன் பின்னர் கோவாவுக்குச் சென்று பத்து நாட்கள் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment