• Enter Slide 1 Title Here

    This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 2 Title Here

    This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 3 Title Here

    This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Monday, January 6, 2014

ஆசஷ் டெஸ்ட் தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்திய அணி 117 புள்ளிகளை பெற்று 2–வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது.

ICClogo(21)

தென்ஆப்பிரிக்கா 133 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் அசைக்க முடியாத நிலையில் உள்ளது.இங்கிலாந்துக்கு எதிரான ஆசஷ் தொடரை 5–0 என்ற கணக்கில் வென்றதால் ஆஸ்திரேலியா 5–வது இடத்தில் இருந்து இரண்டு இடங்கள் முன்னேறி 3–வது இடத்தை பிடித்துள்ளது.

ஆசஷ் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலியா 101 புள்ளிகளை பெற்று இருந்தது. தற்போது 111 புள்ளிகளை பெற்றுள்ளது.5 டெஸ்டிலும் தோற்றதால் இங்கிலாந்து 107 புள்ளிகளுடன் 4–வது இடத்துக்கு பின்தங்கியது. பாகிஸ்தான் (102 புள்ளிகள்) 5–வது இடத்திலும், இலங்கை 6–வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 7–வது இடத்திலும், நியூசிலாந்து 8–வது இடத்திலும், ஜிம்பாப்வே 9–வது இடத்திலும், வங்காளதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.

இந்திய அணி அடுத்து நியூசிலாந்துடன் 2 டெஸ்டிலும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்டிலும் விளையாடுகிறது. பிப்ரவரி மாதம் இந்த தொடர் நடக்கிறது. இங்கிலாந்து அணி அடுத்து இலங்கையுடன் ஜூன் மாதம் டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

உலக இரு­ப­துக்கு 20 மகளிர் கிரிக்கட் போட்­டிகள் இவ் வருடம் மார்ச் மாதம் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இலங்கை மகளிர் கிரிக்கட் அணி இன்னும் சில தினங்­களில் இந்­தி­யா­வுக்கு புறப்­பட்டுச் செல்­ல­வுள்­ளது.


sasikala


அங்கு மூன்று மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கட் போட்­டி­க­ளிலும் மூன்று மகளிர் சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 போட்­டி­க­ளிலும் இந்­தி­யாவை இலங்கை எதிர்த்­தா­ட­வுள்­ளது.ஜன­வரி 19, 21, 23 ஆகிய திக­தி­களில் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கட் போட்­டி­களும் ஜன­வரி 25, 26, 28ஆம் திக­தி­களில் சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 போட்­டி­களும் நடை­பெ­ற­வுள்­ளன.


இலங்கை மகளிர் அணியின் தலை­வி­யாக ஷஷி­கலா சிறி­வர்­தன தொடர்ந்தும் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.சக­ல­துறை வீராங்­க­னை­யான இவர் 73 மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கட் போட்­டி­களில் 69 தட­வைகள் துடுப்­பெ­டுத்­தாடி 1381 ஓட்­டங்­களை மொத்­த­மாக பெற்­றுள்­ள­துடன் பந்­து­வீச்சில் 89 விக்­கட்­க­ளையும் கைப்­பற்­றி­யுள்ளார். 30 சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் 27 தட­வைகள் துடுப்­பெ­டுத்­தா­டி­யுள்ள ஷஷி­கலா 369 ஓட்­டங்­களைப் பெற்­றுள்ளார். பந்­து­வீச்சில் 32 விக்­கட்­களை வீழ்த்­தி­யுள்ளார்.


மகளிர் சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­களில் இலங்கை சார்­பாக சதம் குவித்த ஒரே ஒரு வீராங்­க­னை­யான சமரி அத்­தப்­பத்து அணியின் உதவித் தலை­வி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.இவர் 26 சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­களில் 782 ஓட்­டங்­க­ளையும் 26 சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் 24 தட­வைகள் துடுப்­பெ­டுத்­தாடி 266 ஓட்­டங்­க­ளையும் பெற்­றுள்ளார்.


இதே­வேளை சிரேஷ்ட வீராங்­க­னை­க­ளான சந்­த­மாலி தோல­வத்­தவும் சமனி சென­வி­ரட்­னவும் இலங்கை அணி­யி­லி­ருந்து வில­கிக்­கொள்­வ­தாக சில தினங்­க­ளுக்கு முன்னர் தமக்கு அறி­வித்­த­தாக இலங்கை கிரிக்கட் நிறு­வனம் தெரி­வித்­தது.பயிற்சிப் போட்­டிக்கு 2013 டிசம்பர் 30ஆம் திகதி வருகை தரு­மாறு அழைக்­கப்­பட்ட சந்­த­மாலி அதனை மறுத்­து­விட்டு அணி­யி­லி­ருந்து வில­கிக்­கொள்­வ­தாக அறி­வித்­த­தா­கவும் இலங்கை கிரிக்கட் நிறு­வன ஊடகப் பிரிவு தெரி­வித்­தது.


இதே­வேளை சர்­வ­தேச ஒருநாள் குழாமில் இணைக்­கப்­பட்­டி­ருந்த சமனி சென­வி­ரட்­னவும் தானாக வில­கிக்­கொண்­ட­தாக ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.


ஷஷி­கலா, சமரி அத்­தப்­பத்து ஆகி­யோ­ருடன் பின்­வ­ருவோர் இலங்கை மகளிர் கிரிக்கட் குழாமில் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.ஏஷானி லொக்­கு­சூ­ரிய, தீபிகா ரசங்­கிக்கா, டிலானி மனோ­தரா, சமரி பொல்­கம்­பொல, யசோதா மெண்டிஸ், அனூஷ்கா சஞ்­சீ­வனி, மாதுரி சமு­திக்கா, சந்­திமா குண­ரட்ன, உதே­ஷிக்கா ப்ரபோ­தினி, ஸ்ரீபாலி வீரக்கொடி, லசன்தி மதுஷானி, ஓஷாதீ ரணசிங்க ஆகியோர் குழாமில் இடம்பெறும் ஏனைய வீராங்கனைகளாவர்.


இவர்களை விட நிலக்ஷி சில்வா, இனோக்கா ரணவீர, சத்துராணி குணவர்தன, ரங்கிக்கா பெர்னாண்டோ ஆகிய நால்வரும் தயார் நிலை வீராங்கனைகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள இளைய மற்றும் அனுபவம் வாய்ந்த ஆயிரக்கணக் கான வீர, வீராங்கனைகளது ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் வருடமாக 2014 அமையவுள்ளது.இவ் வருடம் பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் இவ்வுலகை ஆர்ப்பரிக்க வைக்கவுள்ளன.fifa-world-cup-2014-0a


உலக அரங்கில் இடம்பெறும் விளையாட்டுகளில் தத்தமக்கு பிடித்த விளையாட்டை மக்கள் ரசிப்பதற்கு ஏது வான வகையில் 2014இல் பல்வேறு தனி விளையாட்டு நிகழ்ச்சிப் போட்டிகளும் பல்வகை விளையாட்டு நிகழ்ச்சிப் போட்டிகளும் நடை பெறவுள்ளன.


யூசெய்ன் போல்ட், லயனல் மெசி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, குமார் சங்கக்கார, விராத் கோஹ்லி, கோரி அண்டர்சன், ஷேன் வொட்சன், செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரப்போவா, செபெஸ்டியன் வெட்டெல் போன்ற இன் னும் பல வீர, வீராங்கனைகளின் ஆற்றல் ெவளிப்பாடுகளைக் கண்டு இவ்வுலகம் ஆனந்த பிரவாகத்தில் மூழ்கவுள்ளது.


இவ் வருடம் நடைபெறவுள்ள பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் முழு உலகையும் பரபரப்பில் ஆழ்த்தக்கூடிய சர்வ தேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளன (ஃபீஃபா) உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டிகள் றியோ டி ஜெனெய்ரோவில் 2014 ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை நடைபெறவுள்ளன.இப்போட்டிகளை ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிறேஸில் முன்னின்று நடத்துகின்றது.



முதலாவது உலக சம்பியன் உட்பட இரண்டு தடவைகள் உலக சம்பியனான உருகுவே, நான்கு தடவைகள் உலக சம்பியனான இத்தாலி, மூன்று தடவைகள் சம்பயினான ஜேர்மனி, இரண்டு தடவைகள் சம்பியனான ஆர்ஜன்டினா, தலா ஒரு தடவை சம்பியனான இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் உட்பட 32 நாடுகளைச் சேர்ந்த 736 வீரர்களின் கால்பந்தாட்ட நுட்பத் திறன்களையும் ஆற்றல்களையும் இவ் வருட உலகக் கிண்ண போட் டிகளில் ரசிகர்களுக்கு காணக் கூடியதாக இருக்கும்.Sochi_2014_Winter_Olympics_Games_Logo


இதனைவிட 20 வயதின்கீழ் மகளிர் மற்றும் 17 வயதின் கீழ் மகளிர் உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.


உலக இருபதுக்கு 20 கிரிக்கட்


ICC Twenty20 2014 logo


ஆண், பெண் இரு பாலாருக்குமான சர்வதேச கிரிக்கட் பேரவை (ஐசிசி) உலக இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகள் பங்களாதேஷில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளன. எனினும் பங்களாதேஷில் நிலவும் அரசியல் கொந்தளிப்பு காரணமாக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அந்­நாட்டு நிலை­மைகள் குறித்து சர்­வ­தே­ச கிரிக்கட் பேரவை கண்­கா­ணித்து வரு­கின்­றது. ஆண்களுக்கான போட்டிகளில் 16 நாடுகளைச் செர்ந்த 240 வீரர்களினதும் பெண்களுக்கான போட்டிகளில் 10 நாடு களைச் சேர்ந்த 140 வீராங்கனைகளதும் கிரிக்கட் ஆற்றல்களைக் காணக்கூடியதாக இருக்கும்.


உலக இருபதுக்கு 20 போட்டிகளுக்கு முன்பதாக ஐந்து நாடுகள் பங்குபற்றும் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் பங்களாதேஷில் நடைபெறவுள்ளது. இதில் ஐந்தாவது நாடாக ஆப்கானிஸ்தான் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.


குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்


குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ரஷ்யாவின் சொச்சி பிராந்தியத்தில் பெப்ரவரி 7 முதல் 23 வரை நடைபெறவுள்ளது.


15 வகையான விளையாட்டுகளில் 98 வகையான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.


இப்போட்டிகளில் 85 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2500 ஆண், பெண் போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.


பொதுநலவாய மற்றும் ஆசிய


விளையாட்டு விழாக்கள்


இலங்கை உட்பட 70 நாடுகள் பங்குபற்றும் பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழா ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோவில் ஜூன் 13 முதல் ஜூலை 13 வரை நடைபெறவுள்ளது. இவ் விழாவில் தனிநபர் மற்றும் குழுநிலை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற வுள்ளன. 17 வகையான விளை யாட்டுகளில் 250க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களுக்கான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இவ் வருட பொதுநலவாய விளையாட்டு விழா வில் 6,000க்கும் மேற்பட்ட வீர, வீராங் கனைகள் பங்குபற்றவுள்ளனர்.


இதனைத் தொடர்ந்து மற்றொரு பல்வகை விளையாட்டுப் போட் டிகளை அரங்கேற்றும் ஆசிய விளையாட்டு விழா, தென் கொரியாவின் இன்சொன் நகரில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ளன. 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,000 வீர, வீராங்கனைகள் 40 க்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் 450க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களுக்காக போட்டியிடுவர்.


இளையோர் ஒலிம்பிக் விழா


இலங்கை பங்குபற்றவுள்ள மற்றொரு விளையாட்டு விழா இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவாகும். இரண்டாவது தடவையாக நடைபெறும் இவ் விளையாட்டு விழா சீனாவின் நாஞ்சிங் நகரில் ஆகஸ்ட் 16 முதல் 28வரை நடைபெறவுள்ளன. சர்வதேச அரங்கில் எதிர்கால வீளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்கும் களமாக இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழா அமைகின்றது.


ஆசிய வலைபந்தாட்டப் போட்டிகள்


இலங்கை நம்பிக்கையுடன் பங்குபற்றும் மேலும் ஒரு சர்வதேச போட்டியாக ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளன. இவ் வருடம் மீண்டும் ஆசிய சம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்கும் பொருட்டு இலங்கை வலைபந்தாட்டக் குழாம் புதிய பயிற்றுநரின்கீழ் தீவிர பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.


இதர விளையாட்டுப் போட்டிகள்


மகளிர் உலகக் கிண்ண றக்பி, உலக உடற்கலை சாகச (ஜிம்னாஸ்டிக்ஸ்) வல்லவர் போட்டிகள், உலக சுவட்டு சைக்கிளோட்ட வல்லவர் போட்டிகள், வழமையான நான்கு க்ராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள், ஃபோர்ம்யூலா வன் க்ரோன் ப்றீ காரோட்டப் போட்டி என்பனவும் இவ்வருடம் விளையாட்டுலகை அலங் கரிக்கவுள்ளன.

Saturday, January 4, 2014

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை 204 ஓட்டங்களையும், பாகிஸ்தான் 383 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.


 1664831423Untitled-1இந்த நிலையில் 142 ஓட்டங்களால் பாகிஸ்தான் முன்னிலையில் இருக்க தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 420 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 116 ஓட்டங்களுடனும், பிரசன்ன ஜெயவர்த்தன 48 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.  இந்தநிலையில், ஐந்தாவதும் இறுதியுமான இன்றைய நாளில் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 480 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை இரண்டாவது இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டது.


மெத்தியூஸ் 157 ஓட்டங்களுடனும், பிரசன்ன ஜெயவர்த்தன 63 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன்படி 302 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளை போட்டிவெற்றி தோல்வியின்றி நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டது. இலங்கை அணி வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவுசெய்யப்பட்டார்.

Friday, January 3, 2014

ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஷ் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 4 டெஸ்ட் முடிந்து உள்ளது. இதில் அனைத்திலும் ஆஸ்திரேலியா வென்று 4–0 என்ற கணக்கில் உள்ளது. இரு அணிகள் இடையேயான 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது.

steve smith ton

டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி கேப்டன் கூக் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் வார்னர் 16 ரன்னிலும், ரோஜர்ஸ் 11 ரன்னிலும் போல்டு ஆகி வெளியேறினர்.


கேப்டன் கிளார்க் 10 ரன்னில் அவுட் ஆனார். வாட்சன் மட்டும் சிறிது நேரம் தாக்கு பிடித்து ஆடினார். அவர் 43 ரன் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் ஜார்ஜ் பெய்லி (1 ரன்) வந்த வேகத்தில் வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலியா 97 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.அதன்பின் பிராட் ஹாடின்– ஸ்டீவன் ஸ்மித் ஜோடி சரிவில் இருந்து மீட்டது. இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளித்து ரன்களை சேர்த்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 200 ரன்னை கடந்தது.



தேனீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுக்கு 201 ரன் எடுத்து இருந்தது. பிராட் ஹாடின் 59 ரன்னிலும், ஸ்மித் 48 ரன்னிலும் இருந்தனர். தேனீர் இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடியது. சிறப்பாக ஆடி வந்த ஹாடின் 75 ரன்னில் ஆட்டம் இழந்தார். எதிர்முனையில் ஆடிய ஸ்மித் சதம் அடித்தார். சதம் அடித்த சிறிது நேரத்தில் 115 ரன் இருக்கும் போது விக்கெட் பறிகொடுத்தார். அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்ததால் ஆஸ்திரேலிய அணி 326 ரன்னில் சுருண்டது.

Posted by V4Tamil .com on 5:18 AM in    No comments »

7 முறை பார்முலா ஒன் போட்டி சாம்பியனாக, முடிசூடா மன்னனாக வலம் வந்த மைக்கேல் ஷமேக்கர் தொடர்ந்து கோமாவில் இருக்கிறார். இன்று அவரது 45வது பிறந்த நாளாகும். ஆனால் ஷூமேக்கர் கோமாவில் இருப்பதால் அவரது ரசிகர்கள் இந்த நாளை மிகவும் அமைதியாக, ஷூமேக்கர் புகழை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.


03-1388730920-michael-schumacher-26-600

ஷூமேக்கரின் இணையதளத்தில் அவரைப் புகழ்ந்து அவரது குடும்பத்தினர் செய்தி வெளியிட்டுள்ளனர். ஷூமேக்கர் ஒரு போராளி. அவர் அவ்வளவு சீக்கிரம் இந்த உயிர்ப் போராட்டத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்று அவர்கள் புகழ்ந்துள்ளனர். ரசிகர்களுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டபோது திடீரென தடுமாறி விழுந்து பாறையில் தலை மோதியதில் படுகாயமடைந்த ஷூமேக்கர் தற்போது பிரெஞ்சு மருத்துவமனையில் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.

மைக்கேல் ஷூமேக்கரின் குடும்பத்தினர் அவரது இணையதளத்தில் விடுத்துள்ள செய்தியில், ஷமேக்கருக்காக பிரார்த்தனை செய்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.மேலும் அவர்கள் கூறுகையில், உலகெங்கும் ஷூமேக்கருக்காக பிரார்த்தனை செய்யும், விரைவில் குணமடைய வேண்டி செய்திகளை அனுப்பி வரும் அனைவருக்கும் எங்களது நன்றிகள். இது எங்களுக்குப் பெரும் பலமாக இருக்கிறது. ஷூமேக்கர் ஒரு போராளி. அவ்வளவு சீக்கிரம் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டார். இந்தப் போராட்டத்திலும் அவர் விட்டுக் கொடுக்க மாட்டார், வெல்வார். நன்றி என்று தெரிவித்துள்ளனர்.


பார்முலா 1 கார்ப் பந்தயத்தின் ஹீரோவாக வலம் வந்தவர் ஷூமேக்கர். 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவர். அசைக்க முடியாத கார்ப்பந்தய வீரராக திகழ்ந்தவர். உலகெங்கும் கோடிக்கணக்கான இளைஞர்களை வசீகரித்த பந்தய வீரர் ஷூமேக்கர் விபத்துக்குள்ளானபோது அவரது தலையில் போட்டிருந்த ஹெல்மட்டின் தரம் தற்போது சர்ச்சைக்குள்ளாகியது. பாறையில் மோதிய வேகத்தில் அவரது ஹெல்மட் இரண்டாக உடைந்து சிதறி விட்டதாம். இதனால் ஹெல்மட்டின் தரம் குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது. அதுகுறித்தும் பிரெஞ்சு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


இதற்கிடையே ஷூமேக்கர் பல வருடம் இணைந்து கார்ப்பந்தயங்களில் பங்கேற்ற பெராரி எப் ஒன் அணியைச் சேர்ந்த நிர்வாகத்தினர், வீரர்கள் அனைவரும் இன்று ஷூமேக்கர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை முன்பு கூடி அமைதி கூட்டம் நடத்தவுள்ளனர்.ஷூமேக்கருக்கு அருகிலேயே அவரது மனைவி கோரின்னா, இரு குழந்தைகள், தந்தை, தம்பி ஆகியோர் உடன் இருந்து வருகின்றனர்.

ஷூமேக்கருக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் அவரது உடல் நலம் குறித்த செய்திகளைச் சேகரிக்க மருத்துவமனை அருகிலேயே பல்வேறு மீடியாக்களைச் சேர்ந்தவர்கள் குவிந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் மாறு வேடத்தில் மருத்துவமனைக்குள் ஊடுறுவ முயன்று பரபரப்பையும் ஏற்படுத்தினர். பாதிரியார் போல ஒரு செய்தியாளர் உள்ளே போய் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.


இலங்கை அணி தொடர்ந்தும் சோபிக்க தவ­று­கின்­ற­மையால் கிரிக்கெட் அணியில் பாரிய மாற்­றங்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் எழுந்­துள்­ளன. அத்­தோடு அணியின் வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்க மற்றும் அதி­ரடி துடுப்­பாட்ட வீரரும் பந்து வீச்­சா­ள­ரு­மான தி­ஸர பெரேரா ஆகி­யோரின் இருப்பும் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.


Tamil-Daily-News_58797419072


பயிற்றுவிப்பாளர்களிலும் மாற்றங்கள் ஏற்படலாமென்றும் குறித்த ஆங்­கில ஊட­க­ம் செய்­தி வெளி­யிட்­டுள்­ளது.


இது தொடர்பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, லசித் மலிங்­கவின் அண்­மைக்கால பெறு­பே­றுகள் மிகவும் மோச­மா­ன­தாக அமைந்­துள்­ளன. இதனால் அவர் அணி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.இலங்கை கிரிக்கெட் சபையின் மூத்த அதி­கா­ரி­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்ற சந்­திப்­பை­ய­டுத்து புதிய வரு­டத்தில் அதி­க­ள­வி­லான மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முடிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் வைத்து பாகிஸ்­தா­னுக்­கெ­தி­ராக இலங்கை அணி 2--3 என்ற கணக்கில் ஒருநாள் சர்­வ­தேசப் போட்டித் தொடரைத் தோற்ற பின்பு, முழு­மை­யான திற­மை­களை வெளிப்­ப­டுத்­தாத சிரேஷ்ட வீரர்­களைக் கொண்டு போட்­டி­களை வெற்றி கொள்ள முடி­யாது எனத் தெரி­விக்­கப்­பட்­ட­தா­கவும், அதன் கார­ண­மாக லசித் மலிங்க இலங்கை அணி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­டலாம் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


Thisara


லசித் மலிங்க, திஸர பெரேரா இரு­வரும் போது­மா­ன­ளவு அர்ப்­ப­ணிப்பை வெளிப்­ப­டுத்­து­வ­தில்லை எனவும், லசித் மலிங்­கவின் உடற்­த­குதி தொடர்­பான பிரச்­சி­னை­களும் காணப்­ப­டு­வ­தா­கவும், அதன் கார­ண­மாக உடற்­த­குதிப் பயிற்­சி­க­ளிலும் லசித் மலிங்க பங்­கு­பற்­று­வ­தில்லை எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


இதே­வேளை இடம்­பெற்­று­வரும் பிக் பாஷ் லீக் தொடரில் பங்­கு­பற்­று­வ­தற்­கான அனு­ம­தியை திஸர பெரேரா கோரி­யி­ருந்­த­தாக அச்­செய்­தியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆனால் அதற்­கான அனு­மதி மறுக்­கப்­பட்­ட­தோடு, இலங்­கைக்கு திரும்பவுள்ள அவர் இலங்கை "ஏ" அணி போட்­டி­களில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இவர்­களைத் தவிர, இலங்­கையின் துடுப்­பாட்டப் பயிற்­று­விப்­பாளர் மாவன் அத்­தப்­பத்து, களத்­த­டுப்புப் பயிற்­று­விப்­பாளர் றுவன் கல்­பகே ஆகி­யோரின் பத­வி­களும் ஆபத்­தி­லுள்­ள­தாகக் குறிப்பிடப்படுகிறது.

Thursday, January 2, 2014

ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஷ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.


9bfe707d-aa51-40c9-84fa-1e956aee932c_S_secvpf


இதுவரை நடந்த 4 டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் 381 ரன் வித்தியாசத்திலும் அடிலெய்ட்டில் நடந்த 2–வது டெஸ்டில் 218 ரன்னிலும், பெர்த்தில் நடைபெற்ற 3–வது டெஸ்டில் 150 ரன்னிலும், மெல்போர்னில் நடந்த 4–வது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.


ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் மோதும் 5–வது மற்றும் கடைசி ஆசஷ் டெஸ்ட் சிட்னியில் நாளை (3–ந்தேதி) தொடங்குகிறது.4 டெஸ்டிலும் மோசமாக தோற்ற கூக் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்த டெஸ்டிலும் தோல்வி அடைந்து ‘ஒயிட்வாஷ்’ ஆக வாய்ப்பு உள்ளது.5 டெஸ்டிலும் வென்று இங்கிலாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்யும் இலக்குடன் ஆஸ்திரேலியா உள்ளது.


இந்த டெஸ்டில் வெற்றி பெற்று ஆறுதல் பெற வேண்டும் என்று இங்கிலாந்து உள்ளது. ‘டிரா’ செய்து ஒயிட் வாஷை தவிர்க்க கடுமையாக போராட வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ளது.

ஆண்டர்சன் 14 சிக்சர் அடித்ததன் மூலம், ஒரே போட்டியில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் 3ம் இடத்தை பிடித்தார். முதல் இடத்தில் இந்தியாவின் ரோகித் சர்மா உள்ளார். இவர், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 16 சிக்சர் விளாசி 209 ரன்களை குவித்தார். அடுத்த இடத்தில், ஆஸ்திரேலியாவின் வாட்சன் 15 சிக்சர்களுடன் உள்ளார்.Tamil-Daily-News_43543207646
*ஆண்டர்சன் 14, ரைடர் 5, மெக்கல்லம் 3 என நியூசிலாந்து அணி நேற்றைய போட்டியில் மட்டும் 22 சிக்சர் விளாசியுள்ளது. ஒரே போட்டியில் ஒரு அணி அடித்த அதிகபட்ச சிக்சர் இதுவே. இதுவும் உலக சாதனை. இதற்கு முன் இந்தியா, கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 19 சிக்சர் விளாசியது. அது 50 ஓவர். நியூசிலாந்து அடித்திருப்பது வெறும் 21 ஓவரில் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, January 1, 2014

ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் படைத்துள்ளார்.


 524640946Tamil3இதற்கு முன்னதாக ஒரு நாள் போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்து சாதனை படைத்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயித் அப்ரிடியின் சாதனையை, நியூசிலாந்து வீரர் ஆண்டர்சன் முறியடித்துள்ளார். மேற்கு இந்திய தீவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் 36 பந்துகளில் சதமடித்து இந்த சாதனையை ஆண்டர்சன் படைத்துள்ளார்.

முன்னதாக 1996-ல் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அப்ரிடி 37 பந்துகளில் அதிவேக சதமடித்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது.

Tuesday, December 31, 2013

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் காலிஸ் நேற்று முன்தினம் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற இந்திய சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 tendulதெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'நம்ப முடியாத அளவுக்கு விளையாடி டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துள்ள காலிசுக்கு வாழ்த்துகள். கிரிக்கெட் விளையாட்டை சரியான உத்வேகத்துடன் விளையாடி உள்ளீர்கள்.


உங்களுக்கு எதிராக நான் விளையாடிய நாட்கள் மகிழ்ச்சிகரமானது. காலிஸ் நீங்கள் உண்மையான ஒரு சாம்பியன். கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின்னரான வாழ்க்கை அப்படி ஒன்றும் மோசமானது அல்ல' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தென் ஆப்ரிக்க அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. ஒருநாள் தொடரை தென் ஆப்ரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த பரபரப்பான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி டர்பன், கிங்ஸ்மீட் மைதானத்தில் கடந்த 26ம் தேதி தொடங்கியது.


Tamil-Daily-News_57846796513

டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 334 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. விஜய் 97, புஜாரா 60, கோஹ்லி 46, ரகானே 51* ரன் எடுத்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ஸ்டெய்ன் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 500 ரன் குவித்தது. கடைசி டெஸ்டில் களமிறங்கிய காலிஸ் 115 ரன் விளாசினார். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 6 விக்கெட் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து 166 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன் எடுத்திருந்தது.

புஜாரா 32, கோஹ்லி 11 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். ஸ்டெயின் வீசிய முதல் பந்திலேயே கோஹ்லி விக்கெட் கீப்பரிடம் பிடிபட்டு ஆட்டமிழந்தார். பந்து கோஹ்லியின் மட்டையில் படாமல் தோள்பட்டையில் உரசி சென்ற நிலையில், நடுவரின் தவறான கணிப்பால் இந்தியா முக்கியமான விக்கெட்டை இழந்தது. அடுத்து புஜாராவும் மேற்கொண்டு ரன் ஏதும் சேர்க்காமல் ஸ்டெயினின் துல்லியமான வேகத்தில் கிளீன் போல்டாக இந்திய அணி தடுமாறியது. ரோகித் 25 ரன் எடுத்து பிலேண்டர் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார்.

ரகானே - கேப்டன் டோனி ஜோடி 6வது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்தது. டோனி 15 ரன் எடுத்து ராபின் பீட்டர்சன் சுழலில் அல்விரோ வசம் பிடிபட்டார். அதே ஓவரிலேயே ஜடேஜா (8) தேவையில்லாமல் 2வது சிக்சர் விளாச ஆசைப்பட்டு விக்கெட்டை தானம் செய்ய, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. ஜாகீர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாக்குப்பிடித்து 41 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன் எடுத்தார். ரகானே - ஜாகீர் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 35 ரன் சேர்த்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது.
இஷாந்த் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

கடைசி விக்கெட்டுக்கு முகமது ஷமி கம்பெனி கொடுக்க, சதத்தை நெருங்கினார் ரகானே. எனினும், பிலேண்டரின் பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதத்தை பூர்த்தி செய்ய நினைத்த அவர் 96 ரன் எடுத்த நிலையில் (157 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) ஸ்டம்புகள் சிதற பரிதாபமாக அவுட் ஆனார். இந்தியா 2வது இன்னிங்சில் 223 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஷமி (1) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ராபின் பீட்டர்சன் 4, ஸ்டெய்ன், பிலேண்டர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 58 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா 11.4 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 59 ரன் எடுத்து அபாரமாக வென்றது. ரோகித் பந்தில் தொடர்ச்சியாக சிக்சர், பவுண்டரி விளாசி வெற்றியை வசப்படுத்தினார் தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித். அல்விரோ பீட்டர்சன் 31, ஸ்மித் 27 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தென் ஆப்ரிக்கா 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. டர்பன் டெஸ்டில் 9 விக்கெட் வீழ்த்தி அசத்திய ஸ்டெய்ன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். டிவில்லியர்ஸ் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

ஸ்டெய்ன் 350

*தென் ஆப்ரிக்க வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன், டெஸ்ட் போட்டிகளில் தனது 350வது விக்கெட்டை நேற்று கைப்பற்றினார். இஷாந்த் விக்கெட்டை வீழ்த்தியபோது அவர் இந்த சாதனை மைல் கல்லை எட்டினார்.

*நடுவர்களில் சில தவறான முடிவுகள் இந்திய அணிக்கு நேற்று பெரும் பின்னடைவை கொடுத்தன. டிஆர்எஸ் முறையை கண்மூடித்தனமாக எதிர்த்து வரும் இந்திய கிரிக்கெட் வாரியம் இனியாவது தனது பிடிவாத போக்கை கைவிடுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

*இந்த போட்டியுடன் டெஸ்ட் அரங்கில் இருந்து விடைபெற்ற ஆல் ரவுண்டர் ஜாக் காலிசை, தென் ஆப்ரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித் மற்றும் மார்னி மார்கெல் இருவரும் தங்கள் தோள்களில் சுமந்தபடி கிங்ஸ்மீட் மைதானத்தை வலம் வந்தனர்.

*தென் ஆப்ரிக்க மண்ணில் இந்தியா 5வது முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. வெளிநாட்டு மைதானங்களில் கடைசியாக விளையாடிய 10 டெஸ்டில், இந்திய அணி 9வது தோல்வியை சந்தித்துள்ளது.

Monday, December 30, 2013

இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் இடம்பெற்று வரும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இறுதி நாள் ஆட்டம் இன்றாகும்.


இந்த நிலையில், தமது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி, நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கட்டுகளை இழந்த நிலையில், 68 ஓட்டங்களை பெற்றிருந்தது.


முன்னதாக இந்திய அணி தமது முதலாவது இனிங்சிற்காக 334 ஓட்டங்களையும், தென்னாபிரிக்க அணி 500 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி, இந்திய அணி, 8 விக்கட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில், 98 ஓட்டங்களால் பின்னிலையில் உள்ளது.

பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான இரண்டு போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 கிரிக்கட் தொடரை 1 க்கு 1 என சமப்­ப­டுத்­திக்­கொண்ட பின்னர் ஐந்து போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கட் தொடரை நழு­வ­விட்ட இலங்கை அணி, நாளை ஆரம்­ப­மா­க­வுள்ள மூன்று போட்­டிகள் கொண்ட தொடரில் திற­மையை வெளிப்­ப­டுத்தி வெற்­றி­கொள்ள முயற்­சிக்­க­வுள்­ளது.Pakistan-Sri-Lanka-Match


இந்த டெஸ்ட் தொடரை மிகுந்த நம்­பிக்­கை­யுடன் எதிர்­கொள்­ள­வுள்­ள­தாக இரண்டு நாடு­க­ளி­னதும் கிரிக்கட் அணித் தலை­வர்கள் குறிப்­பிட்­டுள்­ளதால் இத் தொடர் விறு­வி­றுப்பைத் தோற்­று­விக்கும் என நம்­பப்­ப­டு­கின்­றது.இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான முத­லா­வது டெஸ்ட் கிரிக்கட் போட்டி அபு­தாபி ஷெய்க் சய்யத் விளை­யாட்­ட­ரங்கில் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.


இதனைத் தொடர்ந்து இரண்­டா­வது டெஸ்ட் போட்டி துபாய் விளை­யாட்­ட­ரங்கில் ஜன­வரி 8 முதல் 12 வரையும் கடைசி டெஸ்ட் போட்டி ஷார்ஜா விளை­யாட்­ட­ரங்கில் ஜன­வரி 16 முதல் 20 வரையும் நடை­பெ­ற­வுள்­ளன.இலங்கை அணியைப் பலப்­ப­டுத்தும் பொருட்டு சிரேஷ்ட வீரர்­க­ளான மஹேல ஜய­வர்­தன (முன்னாள் அணித் தலைவர்), விக்கட் காப்­பாளர் பிர­சன்ன ஜய­வர்­தன, சுழல் பந்­து­வீச்­சாளர் ரங்­கன ஹேரத் ஆகியோர் குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.


இவர்­க­ளை­விட எஞ்­சலோ மெத்யூஸ் தலை­மை­யி­லான இலங்கை குழாமில் குமார் சங்­கக்­கார, தினேஷ் சந்­திமால், திமுத் கரு­ணா­ரட்ன, லஹிரு திரி­மான்ன, நுவன் குல­சே­கர, சுரங்க லக்மால், ஷமிந்த எரங்க, நுவன் ப்ரதீப், சச்­சித்ர சேனா­நா­யக்க, டில்­றுவன் பெரேரா, புது­முகம் விஷ்வா பெர்­னாண்டோ (இட­துகை வேகப்­பந்­து­வீச்­சாளர்) ஆகி­யோரும் இடம்­பெ­று­கின்­றனர்.


இலங்கை அணியைப் பொறுத்­த­மட்டில் மஹேல ஜய­வர்­தன (138 டெஸ்ட்கள், 10,806 ஓட்­டங்கள்), குமார் சங்­கக்­கார (117 டெஸ்ட்கள், 10,486 ஓட்­டங்கள்), பிர­சன்ன ஜய­வர்­தன (52 டெஸ்ட்கள், 1,900 ஓட்­டங்கள்), எஞ்­சலோ மெத்யூஸ் (33 டெஸ்ட்கள், 1792 ஓட்­டங்கள்), ரங்­கன ஹேரத் (47 டெஸ்ட்கள், 200 விக்­கட்கள்), நுவன் குல­சே­கர (20 டெஸ்ட்கள், 46 விக்­கட்கள்) ஆகிய வீரர்­களே அனு­ப­வ­சா­லி­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர்.


எனவே இலங்கை அணியை நல்ல நிலைக்கு இட்­டுச்­செல்லும் பாரிய பொறுப்பு இவர்­க­ளது கைக­ளி­லேயே தங்­கி­யுள்­ளது.


பாகிஸ்தான் அணியைப் பொறுத்­த­மட்டில் யூனிஸ் கான் (86 போட்­டிகள், 7,௧௧­௪ ஓட்­டங்கள்), அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் (43 டெஸ்ட்கள், 2,854 ஓட்­டங்கள்), மொஹமத் ஹவீஸ் (34 டெஸ்ட்கள் 2061 ஓட்­டங்கள், 34 விக்­கட்கள்) அஸ்ஹர் அலி (31 டெஸ்ட்கள், 2,081 ஓட்­டங்கள்), உமர் குல் 47 டெஸ்ட்கள், 163 விக்­கட்கள்), சயீத் அஜ்மால் (30 டெஸ்கள், 159 விக்­கட்கள்), அப்துர் ரெஹ்மான் (19 டெஸ்ட்கள், 90 விக்­கட்கள்) ஆகியோர் பிர­தான வீரர்­க­ளாக இடம்­பெ­று­கின்­றனர்.


வர­லாறு


பாகிஸ்­தா­னுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான அங்­கு­ரார்ப்­பண டெஸ்ட் தொடர் பாகிஸ்­தானில் 1982 மார்ச் மாதம் நடை­பெற்­றது. 3 போட்­டிகள் கொண்ட அத் தொடரில் பாகிஸ்தான் 2 க்கு 0 என வெற்­றி­பெற்­றி­ருந்­தது. தொடர்ந்து 1985 இல் மீண்டும் பாகிஸ்­தானில் நடை­பெற்ற தொட­ரிலும் 2 க்கு 0 என பாகிஸ்தான் வெற்­றி­பெற்­றி­ருந்­தது.


1986இல் இலங்­கையில் நடை­பெற்ற தொடரில் இலங்கை முதல் தட­வை­யாக பாகிஸ்­தானை டெஸ்ட் போட்­டியொன்றில் வெற்­றி­கொண்­ட­துடன் தொட­ரையும் 1 க்கு 1 என சமப்­ப­டுத்­திக்­கொண்­டது.


கொழும்பு சி சி சி மைதா­னத்தில் 1986 மார்ச் 14 முதல் 18 வரை நடை­பெற்ற அந்­த இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் டுலீப் மெண்டிஸ் தலை­மை­யி­லான இலங்கை அணி, இம்றான் கான் தலை­மை­யி­லான பாகிஸ்தான் அணியை 8 விக்­கட்­களால் வெற்றி­கொண்­டது.


பாகிஸ்தான் முதல் இன்: 132 (கோசல குறுப்­பு­ஆ­ராச்சி 44 க்கு 5 விக்., அஷன்த டி மெல் 39 க்கு 3 விக்.), 2வது இன்: 172 (ரவீந்­திரன் ரட்­நா­யக்க 37 க்கு 5 விக்.) இலங்கை முதல் இன்: 273 (அர்­ஜுன ரண­துங்க 73 ரவி ரட்­நா­யக்க 38, அர­விந்த டி சில்வா 37, சிதத் வெத்­த­முனி 37), 2வது இன்: 32 க்கு 2 விக்.


அதன் பின்னர் நடை­பெற்ற இரண்டு தொடர்­க­ளிலும் தோல்வி அடைந்த இலங்கை 1995இல் பாகிஸ்­தானை அதன் சொந்த மண்ணில் முதல் தட­வை­யாக தொடர் ஒன்றில் வெற்­றி­கொண்­டது. அர்­ஜுன ரண­துங்க தலை­மை­யி­லான இலங்கை அணி மூன்று போட்­டிகள் கொண்ட அந்தத் தொடரை 2 க்கு 1 என வெற்­றிக்­கொண்டு வர­லாறு படைத்­தது. அத் தொடரில் பாகிஸ்­தானின் அணித் தலை­வ­ராக பிர­பல தொலைக்­காட்சி வர்­ண­னை­யாளர் ரமீஸ் ராஜா தலைமை தாங்­கி­யி­ருந்தார்.


இவ்­வா­றாக இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் டெஸ்ட் தொடர்கள் இரண்டு நாடு­க­ளிலும் மாறி மாறி நடந்­து­வந்­த­போ­திலும் 2009ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி காலை இலங்கை அணி­யினர் பய­ணித்த பஸ் வண்டி மீது லாகூரில் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலின் பின்னர் இலங்கை உட்­பட மற்­றைய நாடுகள் பாகிஸ்­தா­னுக்கு விஜயம் செய்­வதை நிறுத்­திக்­கொண்­டன.


இதன் கார­ண­மா­கவே நடு­நி­லை­யான ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான டெஸ்ட் தொடர் நடை­பெ­ற­வுள்­ளது.இது­வரை இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் 43 போட்­டிகள் நடை­பெற்­றுள்­ள­துடன் 16இல் பாகிஸ்­தானும் 10இல் இலங்­கையும் வெற்­றி­பெற்­றுள்­ளன. 17 போட்­டிகள் வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­துள்­ளன.

Friday, December 27, 2013

பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.


1958067725Untitled-1


டுபாயில் நேற்று பகல், இரவு ஆட்டமாக இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. பாகிஸ்தான் சார்பில் மிஸ்பா உல்ஹக் 51 ஓட்டங்களையும், முஹமட் ஹபீஸ் 41 ஓட்டங்களையும், அஸ்வர் அலி ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.


முடிவில் 49.3 ஓவர்களிலேயே அந்த அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.


இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய லசித் மலிங்க 4 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இதன்படி 233 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை, 49.4 ஓவர்களிலேயே எட்டு விக்கெட்டுக்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.


இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை விளாசி இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்த தினேஷ் சந்திமால் தெரிவானார். மேலும் தொடரின் சிறப்பாட்டக்காரராக பாகிஸ்தான் அணியின் முஹமட் ஹாபீஸ் தெரிவுசெய்யப்பட்டார். இதன்படி ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியா வலுவான தொடக்கத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே ஆட்டம் முடிக்கப்பட்டதால், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களுடன் உள்ளது.இந்தியா, தென் ஆப்ரிக்கா இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது.


Tamil-Daily-News_57242548466


டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவும், தென் ஆப்ரிக்க அணியில் பீட்டர்சனுக்கு பதிலாக தஹிரும் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக தவான், முரளி விஜய் களமிறங்கினர்.
ஆட்டத்தின் 2வது பந்திலேயே தவான் பவுண்டரி விளாசினார். மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்காததால் இந்திய வீரர்கள் சிரமமின்றி ரன்


சேர்த்தனர். ஸ்டெய்ன் பந்துவீச்சு இம்முறையும் எடுபடவில்லை. அவரது ஓவரில் முரளி விஜய், தவான் இருவரும் பவுண்டரிகளை விளாசினர். இந்நிலையில், கடந்த போட்டியில் காயமடைந்த மோர்க்கல் பந்துவீச்சை தொடர்ந்தார். காயத்துடனும் அபாரமாக பந்துவீசிய மோர்க்கல், ஆட்டத்தின் 14வது ஓவரில் தவான் (29) விக்கெட்டை வீழ்த்தினார்.


இதையடுத்து, கோஹ்லிக்கு பதிலாக புஜாரா களமிறக்கப்பட்டார். புஜாரா, முரளி விஜய் ஜோடி, உணவு இடைவேளைக்கு பிறகு அதிரடியாக ரன்களை
சேர்த்தது. தென் ஆப்ரிக்காவின் சுழற்பந்து வீச்சும் எடுபடாததால், உணவு இடைவேளைக்கு பிறகு வீசப்பட்ட முதல் 13 ஓவரில் இந்தியா 60 ரன்களை விளாசியது. மைதானத்தின் போக்கை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு ஆடிய முரளி விஜய், புஜாரா இருவருமே டெஸ்ட் அரங்கில் தங்களது 4வது


அரைசதத்தை பூர்த்தி செய்தனர்.61 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் வெளிச்சமின்மை காரணமாக முதல் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் என்ற வலுவான நிலையில் உள்ளது. முரளி விஜய் 91, புஜாரா 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும், இந்திய அளவில் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து கவுரவித்து வருகிறது. இதன்படி 2012-13-ம் ஆண்டுக்கான விருது பட்டியலை கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.


aswin

இதில் பாலி உம்ரிகர் விருதுக்கு சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுக்குரிய காலக்கட்டத்தில்(2012 அக்டோபர் 1 முதல் 2013-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வரை) அஸ்வின் 43 டெஸ்ட் விக்கெட்டுகளும் (8 டெஸ்ட்), 263 ரன்களும் எடுத்துள்ளார்.

இதே போல் ஒரு நாள் போட்டியில் 24 விக்கெட்டுகளும், 20 ஓவர்போட்டியில் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். அது மட்டுமின்றி 80 ஆண்டு கால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கடந்த இந்தியர் என்ற சாதனையும் இந்த காலக்கட்டத்தில் அவர் படைத்திருந்தார். அவருக்கு பாலி உமர்ரிகர் விருதுடன் ரூ.5 லட்சம் காசோலையும் வழங்கப்படும். இந்த விருதை ஏற்கனவே சச்சின் தெண்டுல்கர் (2 முறை), ஷேவாக், கவுதம் கம்பீர், ராகுல் டிராவிட், விராட் கோலி பெற்றிருக்கிறார்கள்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரருக்கு வழங்கப்படும் திலிப் சர்தேசாய் விருதை ரோகித் ஷர்மா (ரூ.5 லட்சம் பரிசு), ரஞ்சி கிரிக்கெட்டில் ஆல்-ரவுண்டராக ஜொலித்த அபிஷேக் நாயர் லாலா அமர்நாத் விருதையும் (ரூ.2½ லட்சம்) பெறுகிறார்கள்.

சிறந்த வீராங்கனைக்கான எம்.ஏ.சிதம்பரம் விருதை தமிழகத்தை சேர்ந்த திருஷ்காமினி வாங்குகிறார். அவருக்கு விருதுடன் ரூ.50 ஆயிரம் கிடைக்கும். இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்புக்காக முன்னாள் வீரர்கள் ஆர்.ஜி. பாபு நட்கர்னி, பரூக் என்ஜினீயர், மறைந்த ஏக்நாத் சோல்கர் ஆகியோருக்கு நினைவுப்பரிசுடன் தலா ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது. வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருதுக்கு கபில்தேவின் பெயர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Wednesday, December 25, 2013

தென் ஆப்ரிக்காவின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான ஜாக்ஸ் காலிஸ், இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.


Jacques-Kallis


1995ம் ஆண்டு தனது 20வது வயதில் கிரிக்கெட்டில் அறிமுகமான காலிஸ் இதுவரை 165 டெஸ்ட் போட்டியில் விளையாடி 13,174 ரன்களை குவித்துள்ளார். இதில், 44 சதம், 58 அரைசதம் அடித்துள்ளார். நேற்று இவர் அளித்த பேட்டியில், ‘ஓய்வு பெறுவது கடினமான முடிவு. ஆனால், ஓய்வு பெற இதுதான் சரியான தருணம் என கருதுகிறேன். இத்துடன் கிரிக்கெட்டிலிருந்து நான் விலகிவிடப் போவதில்லை. 2015ம் ஆண்டு உலக கோப்பையை தென் ஆப்ரிக்காவுக்கு பெற்றுத்தர வேண்டுமென்பதே என் லட்சியம். அதற்கான வாய்ப்பு இருந்தால் நிச்சயம் நிறைவேற்றுவேன்’ என்றார்.

Posted by V4Tamil .com on 11:10 PM in , ,    No comments »

Tuesday, December 24, 2013

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரப்படுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தென்னாபிரிக்க, இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியினைத் தொடர்ந்தே இந்தத் தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.


ICClogo(21)



 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் தென்னாபிரிக்காவின் ஏபி.டி.வில்லியர்ஸ், ஹசிம் அம்லா இருவரும் முதலிரு இடங்களில் தொடர்ந்தும் காணப்படுகின்றனர். 3ஆவது, 4ஆவது இடங்களுக்கு ஷிவ்நரின் சந்தர்போல், றொஸ் ரெய்லர் இருவரும் முன்னேறியுள்ளனர்.





துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தல்கள்:

1 ஏ.பி.டி.வில்லியர்ஸ்

2 ஹசிம் அம்லா

3 ஷிவ்நரின் சந்தர்போல்

4 றொஸ் ரெய்லர்

5 மைக்கல் கிளார்க்

6 குமார் சங்கக்கார

7 செற்றேஸ்வர் புஜாரா

8 மிஸ்பா உல் ஹக்

9 கிறேம் ஸ்மித்

10 யுனிஸ் கான்


பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் 186 போட்டிகளுக்குப் பின்னர் தென்னாபிரிக்காவின் டேல் ஸ்ரெய்ன் தனது முதலிடத்தை இழந்துள்ளார். 2ஆவது இடத்தில் காணப்பட்ட சகநாட்டு வீரர் வேர்ணன் பிலாந்தர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.


பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தல்:

1 வேர்ணன் பிலாந்தர்

2 டேல் ஸ்ரெய்ன்

3 ரங்கன ஹேரத்

4 சயீட் அஜ்மல்

5 றயன் ஹரிஸ்

6 பீற்றர் சிடில்

7 இரவிச்சந்திரன் அஷ்வின்

8 பிரக்ஜான் ஓஜா

9 ஸ்ருவேர்ட் ப்ரோட்

10 ட்ரென்ட் போல்ட்ற்



சகலதுறை வீரர்களுக்கான தரப்படுத்தலில் இரவிச்சந்திரன் அஷ்வின் முதலிடத்தில் காணப்படுகிறார்.


சகலதுறை வீரர்களுக்கான தரப்படுத்தல்:

1 இரவிச்சந்திரன் அஷ்வின்

2 ஷகிப் அல் ஹசன்

3 ஜக்ஸ் கலிஸ்

4 வேர்ணன் பிலாந்தர்

5 ஸ்ருவேர்ட் ப்ரோட்
ஜோகன்னஸ்பர்க் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 119 ரன் மற்றும் 2வது இன்னிங்சில் 96 ரன் விளாசி ஆட்ட நாயகன் விருது பெற்ற இந்திய வீரர் விராத் கோஹ்லி, ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதல் முறையாக 11வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

kohli

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search