நடிகை த்ரிஷாவிற்கும், அவரது அம்மா உமா கிருஷ்ணனுக்கும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.கடந்த 2004ம் ஆண்டு திரிஷா ஹொட்டல் அறை ஒன்றில் குளிக்கும் காட்சி என்ற பெயரில் காணொளி ஒன்று இணையதளங்களில் வெளியானது.
அதனை வார பத்திரிக்கை ஒன்று படமாகவும், செய்தியாகவும் பிரசுரித்தது. இதை எதிர்த்தும், நஷ்டஈடு கேட்டும் உமா கிருஷ்ணன் எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஒருமுறை கூட உமா கிருஷ்ணன் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்திற்கு வரவில்லை. இந்நிலையில் நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் வழக்கு ஜனவரி 7ம் திகதி செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போதும், திரிஷாவும், அவரது அம்மா உமா கிருஷ்ணனும் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்த விசாரணையின் போது உமா கிருஷ்ணன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று கைது வாரண்டு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment