இந்திய அணி மிக முக்கியத் தொடருக்காக தென் ஆப்பிரிக்கா சென்று இறங்கியது. தோனியிடம் கேள்விகள் கேட்க இந்திய செய்தியாளர்களை விட தென் ஆப்பிரிக்க செய்தியாளர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. காரணம் இந்தத் தொடருக்கு முன்னால் இரு நாட்டு வாரியங்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் கருத்து வேறுபாடுகளே.
கேள்விகள் இருநாட்டு வாரியங்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் குறித்து எழுந்ததை தனது வழக்கமான கூல் சிரிப்பின் மூலமும், நகைச்சுவை கருத்தின் மூலமும் எதிர்கொண்டார் தோனி."இருநாட்டு மட்டைப்பந்து வாரிய நிர்வாகிகளுக்கு இடையே ஒரு மட்டைப்பந்து போட்டி வைத்து இருவரையும் விளையாட சொல்ல வேண்டியதுதான்" என்றாரே பார்க்கலாம் அனைவரும் பெரிதாக சிரிக்கத் தொடங்கி விட்டனர்.
0 comments:
Post a Comment