Tuesday, December 3, 2013

செய்தியாளர் சந்திப்பு என்ற பெயரில் பிரியாணித் திருவிழா நடத்தி வந்த விஜய்யிடம், சச்சின் படத்திலிருந்து ஒரு புதிய பழக்கம்... செய்தியாளர்களில் குறிப்பிட்ட சிலரை மட்டும் தேர்வு செய்து தன் நீலாங்கரை வீட்டுக்கோ, கோடம்பாக்க அலுவலகத்துக்கோ ரகசியமாக வரவழைத்து, அவர்களிடம் 'மனம்விட்டுப்' பேசி அனுப்புவார்.


இந்த சந்திப்பைப் போலவே, சந்திப்பு குறித்த செய்திகளும் ரகசியமாகவே இருந்துவிடும்!நேற்றும் அப்படித்தான்.குறிப்பிட்ட சில நாளிதழ் மற்றும் வார இதழ் நிருபர்களை மட்டும் தனியாக அழைத்த விஜய்யின் மேனேஜர், 'சார் உங்க கிட்ட பர்சனலா கொஞ்சம் பேசனுமாம்... நீங்க மட்டும் வந்துடுங்க,' என ஒவ்வொருவரிடமும் தனியாகச் சொல்லி வைக்க, முத்து படத்தில் தீபாவளிப் பரிசுக்காக வருவார்களே, அப்படி ரகசியமாகப் போய், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு விழித்திருக்கிறார்கள் செய்தியாளர்கள்.


ஆனாலும் தனித்தனியாகவே சந்தித்திருக்கிறார் விஜய். சந்திப்பின்போது அவர் பேசியது இரண்டே வரிகள்தான், 'ண்ணா... இந்தப் படம் நல்லபடியா ரிலீசாகணும்... தயவு செய்து எதுவும் எதிர்மறையா எழுதி காலி பண்ணிடாதீங்க,' இதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேச மறுத்துவிட்டாராம் விஜய்.விஜய் பேட்டி என எதுவும் கொடுக்காததில் கூட வருத்தமில்லையாம் சிலருக்கு. பேஸ்புக்ல போடும் அளவுக்கு படமெடுத்துக்கக் கூட அனுமதிக்கலயே என்றுதான் ரொம்ப அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்!

Posted by V4Tamil .com on 1:14 PM in ,    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search