Monday, December 2, 2013

எனக்கு தோல் நோய் என்று வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. தொடர்ந்து ஷூட்டிங்கில் இருந்ததால் உடம்பு சூடாகிவிட்டது, என்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை சமந்தா.நடிகை சமந்தாவுக்கு மீண்டும் சரும வியாதி வந்ததால், சூர்யா படப்பிடிப்பு ரத்தானதாக செய்திகள் பரவின. ஆனால் படப்பிடிப்பு ரத்தாகவில்லை என்றும், எங்கள் பட ஹீரோயின் சமந்தாதான் என்றும் இயக்குநர் லிங்குசாமி நேற்று அறிவித்தார். இப்போது தன் பங்குக்கு சமந்தாவும் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "என்னைப் பற்றி பரவிய செய்திகளில் உண்மை இல்லை. லிங்குசாமி படப்பிடிப்பில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறுவதும் தவறு. கடுமையான உடல் நலக்குறைவு எனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் வதந்தி பரவி உள்ளது. நான் தற்போது 5 படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். ஒரே நேரத்தில் இந்த படங்களில் தொடர்ந்து நடிப்பதால் உடல் சூடாகிவிட்டது. இதனால் சோர்வடைந்துவிட்டேன். வேறொன்றுமில்லை.இயக்குநர் லிங்குசாமியிடம் அனுமதி பெற்று இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்தேன். தற்போது நலமாக இருக்கிறேன். வரும் 7-ந்தேதி முதல் மும்பையில் சூர்யாவுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்," என்றார்.

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search