Tuesday, December 3, 2013

 தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன் குவித்த அணியாக முதல் இடத்துக்கு முன்னேறுவது உட்பட பல்வேறு சாதனைகளை படைக்க உள்ளது.


Tamil-Daily-News_73787653447 டோனி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்ரிக்காவுடன் 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. கடினமான இந்த தொடருக்காக, இந்திய அணி வீரர்கள் நேற்று அதிகாலை ஜோகன்னஸ்பர்க் புறப்பட்டனர். ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த அணிகள் பட்டியலில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் தலா ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 881 ரன் குவித்து சமநிலையில் உள்ளன.

எனினும், ஆஸி அணி 505 வெற்றிகளைக் குவித்துள்ள நிலையில் இந்தியா 423 வெற்றிகள் பெற்றுள்ளது. தென் ஆப்ரிக்காவுடன் ஜோகன்னஸ்பர்கில் நாளை மறுநாள் நடக்கவுள்ள முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி முதல் ரன் எடுக்கும்போது ஆஸ்திரேலிய அணியை முந்தி முதலிடத்தை பிடிக்கும். இந்த பட்டியலில் பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன. 2013ல் நடந்த ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்க இந்தியாவின் விராத் கோஹ்லி, ரோகித் ஷர்மா, ஷிகார் தவான் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.

தென் ஆப்ரிக்காவுடன் நடக்கும் 3 ஒருநாள் போட்டிகளில் கோஹ்லி, ரோகித், தவான் அதிக ரன் குவித்து முதலிடத்தை பிடிக்க முயற்சிப்பார்கள். இந்திய அணி கேப்டன் டோனி, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் என்ற வகையில் அசாருதீனின் சாதனையை முறியடித்து முதல் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கேப்டனாக இதுவரை 151 போட்டிகளில் விளையாடி 5213 ரன் குவித்துள்ளார். அசாருதீன் கேப்டனாக இருந்த 174 போட்டிகளில் 5239 ரன் குவித்துள்ளார். அவரது சாதனையை தகர்க்க, டோனிக்கு இன்னும் 27 ரன் மட்டுமே தேவை.

இந்தியா 30 என்ற கணக்கில் வென்றால், இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன் என்ற பெருமையும் டோனிக்கு கிடைக்கும். இந்த வகையில் அசாருதீன் 90 வெற்றிகள் பெற்று முதலிடத்திலும், டோனி 88 வெற்றிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.
Posted by V4Tamil .com on 2:29 AM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search