2010ஆம் ஆண்டு முதல் எல்.ஜி. ஐ.சி.சி. விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த விருது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இவ்வாண்டுக்கான விருதுக்கு டோனி, விராத் கோலி, மைக்கல் கிளார்க், அலெஸ்டர் குக் மற்றும் ஏ.பி.டி.வில்லியர்ஸ் ஆகிய ஐந்து பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் அணித் தலைவர் மகேந்திர சிங் டோனி இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
இந்த விருதை பெறும் இரண்டாவது இந்திய வீரர் டோனி ஆவார். இதற்கு முன் இந்திய அணியின் மாஸ்டர் பெட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இந்த விருதை 2010ம் ஆண்டு பெற்றுள்ளார். மேலும் 2012 ஆம் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார தெரிவாகியிருந்தார்.
தென்னாப்பிரிக்கா சுற்று பயணத்திற்காக, தோனி அங்கு சென்றுள்ளதால் அவர் சார்பாக பி.சி.சி.ஐ., பொதுச்செயலாளர் சஞ்சீவ் பாட்டீல் இந்த விருதை இன்று பெற்றுக்கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment