இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின்நேற்றைய போட்டிகளில் நோர்விச் சிட்டி, லிவர்பூல் அணிகள் வெற்றிபெற்றன.
ஸ்ரோக் சிட்டி அணிக்கும், நோர்விச் சிட்டி அணிக்குமிடையிலான போட்டியில் நோர்விச் சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் 34ஆவது நிமிடத்தில் நோர்விச் சிட்டி அணியின் ஜொனதன் ஹொவ்சன் கோலொன்றைப் பெற்றுக் கொடுத்து, 1-0 என்ற முன்னிலையைப் பெற்றுக் கொடுத்தார். அதன் காரணமாக நோர்விச் சிட்டி அணி முதற்பாதியை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல்களைப் பெற்றுக் கொள்ளாது விட, நோர்விச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இப்போட்டியில் வெற்றிபெற்றது.
லிவர்பூல் அணிக்கும், சண்டர்லான்ட் அணிக்குமிடையிலான போட்டியில் லிவர்பூல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய லிவர்பூல் அணி சார்பாக 28ஆவது நிமிடத்தில் டானியல் ஸ்ரர்ட்ஜ் கோலொன்றைப் பெற்றுக் கொடுத்தார். 38ஆவது நிமிடத்தில் லூயிஸ் சுவரேஸ் கோலொன்றைப் பெற்றுக் கொடுக்க, லிவர்பூல் அணி முதற்பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இப்போட்டியின் இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே, 52ஆவது நிமிடத்தில் எமானுலே கியச்செரினி கோலொன்றைப் பெற்று சண்டர்லான்ட் அணிக்கு நம்பிக்கையளித்த போதிலும், அதன் பின்னர் கோல்களைப் பெற்றுக் கொள்ள அவ்வணி தடுமாறியது. 89ஆவது நிமிடத்தில் லூயிஸ் சுவரேஸ் தனது இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுக்க லிவர்பூல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
0 comments:
Post a Comment