புத்தாண்டை வரவேற்கும் முகமாக 'உலகின் மிகப் பெரிய வானவேடிக்கை காட்சி' ஒன்றை நடாத்திய டுபாய் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.பிரமாண்டமாண்டமான இந்த வானவேடிக்கை நேற்று உலகின் உயரமான கட்டிடமான ஸ்கைகார்பர் (பேர்ஜ் கலிபா) கட்டிடத்தினருகில் இடம்பெற்றது.


டுபாயின் 400 இடங்களில் வானவேடிக்கை தளங்களை அமைத்து 5 இலட்சம் வானவெடிகளை வெடிக்கச் செய்துள்ளனர். சுமார் 30 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த வானவேடிக்கையின் போது ஐக்கிய அரபு இராச்சியத்தின் கொடி, சூரிய உதயம் உள்ளிட்ட பலநூறு வடிவங்களை பிரதி பலிக்கச் செய்யப்பட்டுள்ளது.
வானில் சுமார் 100 கிலோ மீற்றர் பரப்பில் வானவேடிக்கைகள் சிதறி ஒளிர்ந்துள்ளது. இதனைக் கணக்கிட்ட கின்னஸ் சாதனை குழுவினர் இதுவே உலகின் மிகப்பெரிய வானவேடிக்கை காட்சி எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த கின்னஸ் உலகசாதனை வானவேடிக்கைகை திறம்படச் செய்வற்கு 200 வல்லுநர்கள் சுமார் 5,000 மணி நேரங்களைச் செலவு செய்துள்ளனர்.
கடந்த வருடம் புத்தாண்டில் குவைத் நாட்டில் 64 நமிடங்களில் 77,282 வானவெடிகள் கொழுத்தியதே சாதனையாக இருந்தது. இச்சாதனை முதல் நிமிடத்திலேயே டுபாயில் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment