
புதுவருடத்துக்காக பலர் புத்தாடை வாங்குவர், சிலர் தங்க நகைகளையும் வாங்குவர். ஆனால் துருக்கியைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளரான அஹ்மட் அதாகான் என்பவர் முற்றிலும் 22 கரட் தங்கத்தால் பெண்களுக்கான ஆடைவடிவமைத்துள்ளார்.780000 தங்கத் துண்டுகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆடையின் எடை சுமார் 3 கிலோகிராம் ஆகும்.
இந்த ஆடையின் விலை 3 லட்சம் துருக்கிய லீரா (சுமார் 4 கோடியே 60 லட்சம் இலங்கை ரூபா) ஆகும். விலை மிக அதிகமானாலும் ஏற்கெனவே பலர் இத்தகைய ஆடைகளை வாங்கியுள்ளனராம். மேலும் தங்க ஆடைகளை வடிவமைக்கத் திட்டமிட்டுள்ள அஹ்மட் அதாகான் இவ்வருடத்தில் இத்தகைய 10 தங்க ஆடைகளை விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கிறார்.
கடந்த வருடம் இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகரான பி. தத்தா, 3 கிலோ எடையுடைய தங்க ஷேர்ட் ஒன்றை தனக்காக தயாரித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment