கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ள இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்சுக்கு, கதாநாயகியின் உதட்டில் முத்தம் தரக்கூடாது என்று அவரது மனைவி கட்டுப்பாடு விதித்துள்ளாராம். ‘வெயில்’, ‘ஆயிரத்தில் ஒருவன்‘, ‘தலைவா‘, ‘ராஜா ராணி‘ போன்ற படங்களுக்கு இசை அமைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் அடுத்து ‘பென்சில்‘ என்ற படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார்.
மணிநாகராஜ் இதனை இயக்குகிறார். நாயகனாக நடிப்பதுபற்றி பிரகாஷ் கூறியதாவது, பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ‘பென்சில்‘ படம் பள்ளி மாணவனை பற்றிய கதை. எனக்கு ஏற்ற விதத்தில் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.கூத்துப்பட்டறையை சேர்ந்த பாபு மற்றும் ‘ஆடுகளம்‘ நரேன் ஆகியோரிடம் நடிப்பு பயிற்சி பெற்றேன். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். நடிப்பதற்கு என் மனைவி சைந்தவி தடை எதுவும் சொல்லவில்லை.
ஆனால் எந்த நாயகியுடன் நடித்தாலும் உதட்டில் முத்தம் கொடுத்து நடிக்கக்கூடாது, நெருக்கமான காட்சிகளில் நடிக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்திருக்கிறார்.என் படம் குடும்பத்தினருடன் அமர்ந்து பார்க்கும்படித்தான் இருக்கும். நடிக்க வந்ததால் இசை அமைப்பதை நிறுத்த மாட்டேன். எனக்கு சோறுபோடுவது இசைதான் என்றார்
0 comments:
Post a Comment