தொழிற்சாலை விபத்தொன்றில் இரு கரங்களிலுமுள்ள மணிக்கட்டிற்குக் கீழானபகுதி மோசமான உருச்சிதைவுக்குள்ளான இளைஞர் ஒருவருக்கு சேதமடைந்த உள்ளங்கைப் பகுதியையும் விரல்களையும் பயன்படுத்தி குறடுகளைப் போன்ற புதிய கரங்களை சீன மருத்துவர்கள் ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.
வாங் ஜின் (18 வயது) என்ற மேற்படி இளைஞர் கடந்த டிசம்பர் 11 ஆம் திகதி இரவு தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த வேளை அவரது கரங்கள் இயந்திரத்தில் சிக்கி உருச்சிதைந்தன.
இதனையடுத்து ஹுனான் மாகாணத்தில் சங்ஷா நகரிலுள்ள ஸியாங்யா மருத்துவமனைக்கு அவர் சேதமடைந்த கரப்பகுதி சகிதம் கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் துரிதமாக செயற்பட்டு அவரது துண்டிக்கப்பட்ட உள்ளங்கைப் பகுதி முழுமையாக சேதமடையாத விரல்கள் என்பவற்றைப் பயன்படுத்தி குறடுகள் போன்ற கட்டமைப்பைக் கொண்ட புதிய கரங்களை அவருக்கு வழங்கியுள்ளனர்.


0 comments:
Post a Comment