Wednesday, January 8, 2014


சிங்கப்பூர் இந்தியருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த 2008ம் ஆண்டு 186 கிலோ ஹெராயின் போதைப்பொருட்களை கடத்தியதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுபாஷ்கரன் பிரகாசம் (29) கைதுசெய்யப்பட்டார்.

இதையடுத்து சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் பிரகாசத்திற்கு தூக்கு தண்டனை வழங்கி 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதனிடையே போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சிங்கப்பூர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இவரது மேல்முறையீட்டில், இந்த போதைப்பொருளை எடுத்து உதவியாக மட்டும் பிரகாசம் செயல்பட்டதால், அவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையானது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும், 15 ரோத்தான் அடியும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். பிரகாசம் மரணதண்டனையில் தப்பிய இரண்டாவது நபர் என்று கூறப்படுகிறது.

இதுபோன்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலேசிய போதைப்பொருள் கடத்தல்காரர் யோங் வை கோங்குகிற்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Posted by V4Tamil .com on 9:00 PM  No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search