ஆசஷ் டெஸ்ட் தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்திய அணி 117 புள்ளிகளை பெற்று 2–வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது.
தென்ஆப்பிரிக்கா 133 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் அசைக்க முடியாத நிலையில் உள்ளது.இங்கிலாந்துக்கு எதிரான ஆசஷ் தொடரை 5–0 என்ற கணக்கில் வென்றதால் ஆஸ்திரேலியா 5–வது இடத்தில் இருந்து இரண்டு இடங்கள் முன்னேறி 3–வது இடத்தை பிடித்துள்ளது.
ஆசஷ் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலியா 101 புள்ளிகளை பெற்று இருந்தது. தற்போது 111 புள்ளிகளை பெற்றுள்ளது.5 டெஸ்டிலும் தோற்றதால் இங்கிலாந்து 107 புள்ளிகளுடன் 4–வது இடத்துக்கு பின்தங்கியது. பாகிஸ்தான் (102 புள்ளிகள்) 5–வது இடத்திலும், இலங்கை 6–வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 7–வது இடத்திலும், நியூசிலாந்து 8–வது இடத்திலும், ஜிம்பாப்வே 9–வது இடத்திலும், வங்காளதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.
இந்திய அணி அடுத்து நியூசிலாந்துடன் 2 டெஸ்டிலும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்டிலும் விளையாடுகிறது. பிப்ரவரி மாதம் இந்த தொடர் நடக்கிறது. இங்கிலாந்து அணி அடுத்து இலங்கையுடன் ஜூன் மாதம் டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
0 comments:
Post a Comment