Wednesday, January 8, 2014


மட்டக்களப்பு மாவட்டத்தில் வட்டவான் அடர்ந்த காட்டுப்பகுதியில் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது பாரியளவில செய்கை பண்ணப்பட்டிருந்த கஞ்சாசேனை கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி கே.தங்கராசா தெரிவித்தார்.

சோளம் செய்கைக்கு மத்தியில் பெரும் பாதுகாப்பான முறையில் அடர்ந்த யானைக்காட்டுப்பகுதியில் இக்கஞ்சாசேனை செய்கை பண்ணபபட்டிருந்தது.மாவட்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாதரனின் பணிப்புரையின் கீழ் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

காட்டில் செய்கை பண்ணப்பட்ட மூன்று அடி உயரமான 70 கஞ்சா மரங்கள் கைப்பற்றப்பட்டன. ஒரு மரத்திலிருந்து 1 கிலோ கஞ்சாவை அறுவடை செய்யமுடியும். சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட கஞ்சாமரங்கள் இன்று மட்டக்களப்பு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். நேற்று அதிகாலை முதல் நேற்று மாலை வரை இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Posted by V4Tamil .com on 10:51 PM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search