Monday, November 11, 2013

2925166941பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்  பயிற்­றுநர் டேவ் வட்­மோரின் பத­விக்­கா­லத்தை நீடிப்­ப­தில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 
எதிர்­வரும் டிசெம்பர், ஜன­வரி மாதங்­களில் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் நடை­பெ­ற­வுள்ள இலங்கை அணி­யு­ட­னான சுற்­றுப்­போட்­டியே  வட்­மோரின் பயிற்­சியின் கீழ் பாகிஸ்தான் அணி விளை­யாடும் கடைசி  சுற்­றுப்­போட்­டி­யாக அமையும்.

அதன்­பின்னர் பெப்­ர­வரி இறு­தியில் ஆரம்­ப­மா­க­வுள்ள ஆசிய கிண்ணப் போட்­டி­க­ளின்­போது பாகிஸ்தான் அணியின் பயிற்­று­ந­ராக வேறொ­ருவர் நிய­மிக்­கப்­ப­டுவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்­ணத்தை வென்­ற­போது அணி யின் பயிற்­று­ந­ராக திகழ்ந்த டேவ் வட்மோர், கடந்த வருடம் மார்ச் மாதம் பாகிஸ்தான் அணியின் பயிற்­று­ந­ராக நிய­மிக்­கப்­பட்டார்.
ஆனால் அதன்­பின்னர் பாகிஸ்தான் அணி பல சுற்­றுப்­போட்­டி­களில் தோல்­வி­யுற்ற­ மையால் வட்­மோரின் செயற்­பா­டுகள் தொடர்­பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதி­கா­ரிகள் அதி­ருப்தி கொண்­டுள்­ள­ளனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்­த­லை­வர்கள், பயிற்­று­நர்கள் சிலரும் வட்­மோரை நீக்க வேண்­டு­மென கருத்துத் தெரி­வித்­தி­ருந்­தனர்.
கடந்த ஜூன் மாதம் நடை­பெற்ற ஐ.சி.சி. சும்­பியன்ஸ் கிண்ணத் தொடரில் ஒரு போட்­டி­யிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெறத் தவ­றி­யது.
அதை­ய­டுத்து வட்­மோரை பதவி நீக்கம் செய்­வ­தற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முயற்­சித்­த­தா­கவும் ஆனால், அவரை திடீ­ரென பதவி நீக்கம் செய்­வ­தற்கு 3 மாத­கால சம்­பளம் வழங்­கப்­பட வேண்­டு­மென்­பதை கருத்­திற்­கொண்டு அத்­திட்­டத்தை கைவிட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

தற்­போது ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் நடை­பெறும் தென்­னா­பி­ரிக்­கா­வு­ட­னான ஒருநாள் தொட­ரிலும் பாகிஸ்தான் அணி தோல்­வி­யுற்­றுள்­ளது. இந்நிலை­யி­லேயே வட்­மோரின் பத­விக்­கா­லத்தை நீடிப்­ப­தில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்­மா­னித்­துள்­ளது.

வட்­மோரின் பயிற்­சியின் கீழ் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இது­வரை டெஸ்ட் தொடர் எதிலும் வெற்றி பெற­வில்லை. அவரின் பத­விக்­கா­லத்தில் விளை­யா­டிய 10 டெஸ்ட் போட்­டி­களில் 2 போட்­டி­களில் மாத்­தி­ரமே பாகிஸ்தான் அணி வென்­றுள்­ளது.
பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்­று­ந­ராக உள்­நாட்டைச் சேர்ந்த ஒரு­வரை நிய­மிப்­ப­தற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விரும்­பு­கி­றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் இடைக்­கால நிர்­வாகக் குழுவின் தலை வர் நஜாம் சேத்தி இது தொடர்­பாக கூறு­கையில், “இப்­ப­யிற்­றுநர் குறிப்­பி­டத்­தக்­க­ளவு தனது பணியை செய்­துள்ளார்.

ஆனால் அவரின் பத­விக்­காலம் பெப்­ர­வரி மாதம் முடி­வ­டை­கி­றது. உள்­நாட்டுப் பயிற்­றுநர் ஒரு­வரை நிய­மிக்க வேண்­டு­மென அதிக அழுத்தம் கொடுக்­கப்­ப­டு­கி­றது என்­பதை நாம் நிரா­க­ரிக்­க­வில்லை” என்றார்.

“வெளி­நாட்டுப் பயிற்­று­நர்­க­ளுக்கு நாம் எதி­ரா­ன­வர்கள் அல்லர். வெளி­நாட்டுப் பயிற்­று­நர்­களால் எமது வீரர்­க­ளுடன் சுதந்திரமாக உரையாட முடியாமைதான் எமது பிரச்சினையாகும்.

இவ்வீரர்கள் சிறப்பாக ஆங்கிலம் கற்றவர்கள் அல்லர். இதனால், வீரர்களும் பயிற்றுநர்களும் பரஸ் பரம் உரையாடுவதிலும் முழுமையாக புரிந்துகொள்வதிலும் சிரமத்தை எதிர்நோக் குகின்றனர்” எனவும் நஜாம் சேத்தி கூறி னார்.

 
Posted by V4Tamil .com on 9:43 PM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search