Friday, October 4, 2013

raja_rani_theatrical_trailerவெளிவந்து ஒரே வாரத்தில் சக்கைப்போடு போட்டிக்கொண்டிருக்கும் ராஜா-ராணி குழாமிற்கு முதலில் எமது வாழ்த்துகள். புதுமுக இயக்குநர் அட்லி இன் அருமையான படைப்பு. பின்ணனி இசை, பாடல்கள் எவையும் எடுத்துக் கொடுக்காத நிலையிலும் சலிப்புத் தட்டாமல் படத்தை பார்க்க வைத்த அட்லிக்கு ஒரு பாராட்டு. நடித்தவர்கள் பற்றி தனித்தனியே சொல்வதென்றால் ஒரு பார்வைக்குள் அடக்கிவிடமுடியாது. வழமை போலவே காதா பாத்திரமாய் வாழ்ந்திருக்கும் சத்தியராஜ், தமக்கொரு அப்பா  இதுபோல் இல்லாதவர்களை ஏங்க வைக்கிறார். ஆர்யா,  சந்தானம் கூட்டணி கலக்கலுக்கு குறைவேயில்லை. பாஸ் என்கிற பாஸ்கரனில் வேலையற்ற பொறுப்பற்றவராக சுத்திவந்த ஆர்யா இதில் ஒரு வேலையிலிருக்கிறார் அவ்வளவே.


நச்சென்று இருக்கும் நஸ்ரியா நம்ளையெல்லாம் ஒருக்கால் பார்க்க வைக்கிறார். கொடுப்பா பாருங்க ஒரு வரவு குத்தாட்டத்தோட அவ்வளவுதான். அதோட கவுந்த ஆர்யா கல்யாணம் வரைக்கும் போயிர்ரார் என்றால் பாருங்களேன். மீள் வரவாய் கும் என்றிருகும் நயனுக்கு நல்லாவே சதை போட்டிருக்கு. நடிப்பில் அசத்திருக்காங்க இருந்தாலும் நஸ்ரியாவோட பார்க்கையில் வயசு தெரியுது.

Raja-Rani-Tamil-Movie-nayantara-sexy-stills-2-586x449

எல்லாரையும் தூக்கி சாப்பிடுற மாதிரி நம்ம ஜெய். நயன் கொடுமை தாங்காமா அழுவார் பாருங்க. அப்பப்பா அப்படியொரு அழுகை நாமே அழுகிற மாதிரி இருக்கும். முதல் காதலோடு முடிந்து விடுவதில்லை வாழ்க்கை என்ற சின்ன கருவை எடுத்து கொண்டு அனைவரும் பார்த்து இரசிக்கும் வண்ணம் செதுக்கியிருக்கும் அட்லி. அண்மைய உண்மை நிகழ்வுகான மதுவுக்கு நாம் அடிமை என்பதையும் காட்டாமல் இல்லை. தினசரி குடிக்கிறவராக வருகிற ஆர்யாவை  நாம் குடிகாரனாக பார்காது சாதரணமாக ஏற்றுக்கொள்வது எம்முள் எங்கோ ஒழிந்திருக்கும்  உண்மையை ஒங்கி அறைந்து சொல்லிச் செல்கிறது.

raja-rani-tamil-movie-stills-01

சங்கரின் உதவி இயக்குநராக இருந்தவர் அட்லி என்பதுஅவரது சின்ன சின்ன பிரமாண்டங்களில் தலைகாட்டுகிறது. மற்றப்படிக்கு படத்தை எந்தவிதமான தொய்வும் இல்லாம் ஒரு முழு நேர சித்திரமாக குடும்பத்தோடு இரசிக்க க்கூடியதாக தந்திருக்கிறார். அமைக்கப்பட்டிருக்கும் காட்சியமைப்புகள்  மணமான ஆண்களிடம் அதிகம் வரவேற்பையும் கைதட்டல்களையும் பெற்றிருந்ததை திரையரங்கில் காணக்கூடியதாக இருந்தது. குடும்பத்தோட பாருங்க. மனைவியை பக்கத்தில இருத்திட்டு மெய்மறந்து கை தட்டி குட்டு வாங்கியவனாக  என்னோட மதிப்பெண்
நூற்றுக்கு


60

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search